'Lord' ஷர்துல் தாக்கூருக்கு திருமணம்... மணப்பெண் யாரு தெரியுமா?

இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், மித்தாலி பருல்கரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.  கே.எல்.ராகுல், அக்சர் படேலை தொடர்ந்து, மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரராக ஷர்துல் தாக்கூர் திருமணம் செய்ய உள்ளார். ஷர்துல் தாக்கூரின் வருங்கால மனைவி மித்தாலி பருல்கர் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.

  • Feb 26, 2023, 23:15 PM IST

 

 

 

 

1 /5

இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் தனது நீண்ட நாள் காதலியை மித்தாலி பருல்கரை நாளை (பிப். 27) மும்பையில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம் குறித்த விவரங்கள் இன்னும் காத்திருக்கின்றன.

2 /5

மித்தாலி பருல்கர் ஒரு தொழிலதிபர். மும்பைக்கு அருகில் உள்ள தானேயில் ஆல் தி பேக்ஸ் என்ற ஸ்டார்ட்-அப் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் சமூக ஊடகங்களில் அதிக நாட்டம் கொண்டவர். அவரது இன்ஸ்டாகிராமில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர்.

3 /5

ஷர்துலும் மித்தாலியும் 2021ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி மும்பையில் ஒரு தனியார் விழாவில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்த விழாவில் ஷர்துலின் நெருங்கிய நண்பர்கள் ரோஹித் சர்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

4 /5

ஷர்துல் தாக்கூர் இறுதியாக 1 வருட இடைவெளிக்குப் பிறகு தனது வருங்கால மனைவியை திருமணம் செய்ய உள்ளார். ஷர்துல் கடந்தாண்டு பிஸியாக இருந்ததால், அப்போது நேரம் கிடைக்கவில்லை. தற்போதுதான் அவருக்கு திருமணம் செய்வதற்கான தேதி கிடைத்துள்ளது. இந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷர்துல் உள்ளார். அதைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

5 /5

ஷர்துலுக்கும் மித்தாலிக்கும் பிப்ரவரி 27ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் மார்ச் 17ஆம் தேதி தொடங்குகிறது. குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்னதாக பயிற்சி தொடங்கும். எனவே, ஷர்துலுக்கு நீண்ட தேனிலவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.