செவ்வாய் பெயர்ச்சி: 2022ல் பண வரவு, அதிர்ஷ்டம் பெற உள்ள ராசிகள் இவையே

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. செவ்வாய் கிரகம் அக்கினியாக கருதப்படுகிறது.  செவ்வாயின் சுப பலன் இருப்பவர்களுக்கு, இராணுவம் அல்லது காவல்துறையில் உயர் பதவிகள் கிடைக்கும். 2022ல் செவ்வாய் கிரகத்தின் இடமும் தாக்கமும் எப்போதெல்லாம் மாறப்போகின்றன என்பதை இந்த பதிவில் காணலாம். 

2022-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செவ்வாய் நுழைகிறார். 2022-ம் ஆண்டு செவ்வாயின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

1 /5

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மாற்றம் சாதகமாக அமையும். செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்களால் செல்வம், பதவி, கௌரவம் அதிகரிக்கும். மேலும், முதலீட்டால் பொருளாதார பலன்கள் ஏற்படும். இது தவிர இந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மாற்றம் சுபமாக அமையும்.

2 /5

மிதுனம்: 2022ல் செவ்வாயின் முதல் ராசி மாற்றம் லாப நோக்கில் நன்றாக இருக்கும். ஜனவரி 16-ம் தேதி தனுசு ராசியில் செவ்வாய் நுழைவதால் பண வரவு ஏற்படும். இதனுடன் தொழிலில் அமோக வெற்றியும் புகழும் பெறுவீர்கள். செவ்வாய் சஞ்சாரத்தின் போது வருமானம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

3 /5

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரமும் சாதகமாக இருக்கும். செவ்வாய் ராசி மாற்றத்தால் ஆதாயம் பெறுவீர்கள். இது தவிர தொழில், வியாபாரம் வேகமாக முன்னேறும். செவ்வாயின் இந்தப் பெயர்ச்சி உங்களின் வேலையில் வெற்றியைத் தரும்.

4 /5

கன்னி: செவ்வாயின் ராசி மாற்றத்தால் கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். தொழில், வேலையில் முன்பை விட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாயின் சுப பலன் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் உடன்பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும்.

5 /5

மீனம்: செவ்வாயின் ராசி மாற்றம் மீன ராசியினருக்கு சாதகமாக அமையப் போகிறது. வாழ்க்கையில் நிலவும் நிதிப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ​​கடின உழைப்புடன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி கிடைக்கும். இது தவிர, பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும்.