நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் என்ற சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அமிர்த கலசம் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் காலம் 400 நாட்கள்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது கணக்கு தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எஸ்பிஐ மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்காக அம்ரித கலசம் நிலையான வைப்புத் திட்டத்தை ஏப்ரல் 12 முதல் மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம்.
எஸ்பிஐ வழங்கும் இந்த FD முதலீட்டு திட்டம் 400 நாட்கள் கால திட்டமாகும். அம்ரித கலசம் என்னும் நிலையான வைப்புத் திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீத வட்டியை எஸ்பிஐ நிர்ணயித்துள்ளது. அதே சமயம் மூத்த குடிமக்கள் தவிர மற்ற குடிமக்களுக்கு 7.10 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைக்கான 400 நாட்களுக்கான திட்டக்காலம் கொண்ட இந்த திட்டத்தில் உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம்.
வாடிக்கையாளர்கள் இதில் புதிதாக டெபாசிட் செய்யலாம். இதனுடன், பழைய வைப்புத்தொகையையும் இந்த திட்டத்தின் கீழ் புதுப்பிக்கலாம். இதில், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு டெர்ம் டெபாசிட் மற்றும் சிறப்பு கால டெபாசிட் வசதியும் உள்ளது.
அமிர்த கலசம் என்னும் இந்த FD திட்டத்தில் இணைய விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வங்கியின் இணையதள சேவை அல்லது யோனோ செயலி வழியாக விண்ணப்பிக்கலாம்.