SBI Good News: சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் அளித்தது எஸ்.பி.ஐ

SBI Floating ATM: நாட்டின் மிகப்பெரிய வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி தனித்துவமான ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. SBI, ஸ்ரீநகரில் உள்ள டால் ஏரியில் ஒரு படகுவீட்டில் (House Boat) ஏடிஎம்-ஐ திறந்துள்ளது. 

இது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயனளிக்கும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பணம் தேவைப்பட்டால், இந்த ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

1 /5

ஸ்ரீநகர் மக்களுக்கு எஸ்பிஐ மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 16 அன்று, ஸ்ரீநகரின் புகழ்பெற்ற டால் ஏரியில் உள்ள படகு வீட்டில் எஸ்பிஐ, ஏடிஎம் -ஐ  திறந்தது. இதை எஸ்பிஐ தலைவர் தினேஷ் கரே திறந்து வைத்தார்.  

2 /5

இந்த மிதக்கும் ஏடிஎம்கள் இப்போது சுற்றுலாப் பயணிகளின் பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இடமாக உள்ளது.

3 /5

இந்த தனித்துவமான முயற்சி குறித்து எஸ்பிஐ ஒரு ட்வீட் செய்துள்ளது. "உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக எஸ்பிஐ ஸ்ரீநகரில் உள்ள #DalLake-ல் ஹவுஸ் போட்டில் ஏடிஎம் -ஐத் திறந்தது. ஆகஸ்ட் 16 -ம் தேதி எஸ்பிஐ தலைவர் இதைத் திறந்து வைத்தார். பிரபலமான டால் ஏரியில் உள்ள #FloatingATM நீண்டகால தேவையை பூர்த்தி செய்கிறது. இது ஸ்ரீநகரின் அழகிற்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கும்." என்று SBI ட்வீட் செய்துள்ளது.

4 /5

இதற்கு முன், SBI 2004 ஆம் ஆண்டில் கேரளாவிலும் மிதக்கும் ஏடிஎம்-ஐத் தொடங்கியது. இந்த மிதக்கும் ஏடிஎம் கேரளாவின் KSINC-வின் 'ஜங்கர் படகு'-ல் திறக்கப்பட்டது.

5 /5

எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களின் வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறது. எஸ்பிஐ இடம் அதிகபட்சமாக 22,224 வங்கி கிளைகளும் 3,906 ஏடிஎம்-களும் உள்ளன.