கடந்த காலங்களில், மோசடி செய்பவர்கள் வங்கி அதிகாரிகள் போல் மக்களை ஏமாற்றிய பல மோசடி நிகழவுகள் நடந்துள்ளன. நமக்கு நிகழ்ந்திருக்கவில்லை என்றாலும் செய்திகள் வழியாகவோ அல்லது பலர் சொல்ல கேட்டோ நாமும் அதை பற்றியெல்லாம் அறிந்திருப்போம்.
இது போன்ற மோசடி செய்பவர்கள் எப்படியாவது உங்கள் தகவல்களைப் பெற்றுக்கொண்டு உங்களிடம் OTP யைப் பெற உங்களுக்கு போன் செய்வார்கள். உங்கள் வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும், KYC சரிபார்ப்பு, உங்களுக்கு ஒரு ஆபர் உள்ளது, உங்களுக்கு லோன் தருகிறோம் என்றெல்லாம் இல்லாத பல பொய்களைச் சொல்லி எப்படியாவது உங்களிடம் தகவலைப் பெற முயற்சிப்பார்கள்.
எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வாடிக்கையாளர்களை இது போன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்ளலாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு அவ்வப்போது எச்சரித்து வருகிறது. இப்போதும் ஒரு புதிய தகவலை வெளியிட்டு பின்வரும் இந்த 7 விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளகூடாது என்று தெரிவித்துள்ளது.
1) OTP ஐ யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் 2) தொலைநிலை அணுகல் (remote access) பயன்பாட்டைத் தவிர்க்கவும்
3) யாரென்று தெரியாதவர்களுடன் ஆதார் நகலை பகிர்ந்து கொள்ள வேண்டாம் 4) உங்கள் வங்கிக் கணக்கில் உங்கள் புதிய தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கவும்.
5) உங்கள் கடவுச்சொல்லை அவ்வப்போது மாற்றவும். 6) உங்கள் மொபைல் மற்றும் ரகசிய தரவை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
7) எந்த இணைப்பையும் கிளிக் செய்வதற்கு அது நம்பகமான இடத்தில் இருந்து வந்துள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்து வங்கியைத் தொடர்பு கொள்ள நினைத்தால் பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம்.
உங்கள் வங்கிக் கணக்கில் ஏதேனும் தவறான பரிவர்த்தனை இருப்பதை நீங்கள் கண்டால், உடனடியாக கட்டணமில்லா வாடிக்கையாளர் பராமரிப்பு எண் ஆன 18004253800, 1800112211 இல் புகார் அளிக்கவும். அல்லது இணைய குற்றங்கள் குறித்து https://cybercrime.gov.in இல் புகாரளிக்கலாம்.