சனி உதயம் 2023: இந்த 5 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

Shani Uday 2023: நீதிக் கடவுளான சனி கும்பத்தில் உதயமாகியுள்ளார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனியின் உதயத்திற்குப் பிறகு, சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி பணம், தொழில் மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றில் சிக்கலைச் சந்திக்கும் ஐந்து ராசி யார் என்பதை பார்ப்போம்.

1 /5

மேஷ ராசி: சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு சரியான நேரம் இல்லை. செலவுகள் கூடும் மற்றும் வருமான ஆதாரங்கள் தடைபடலாம். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தவும். கோபம் மற்றும் கட்டுப்பாடற்ற பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.  

2 /5

கன்னி ராசி: குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். அந்நியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். தெரியாத நபர்களிடம் பண பரிவர்த்தனை செய்ய வேண்டாம். உங்கள் வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்துங்கள்.  

3 /5

விருச்சிக ராசி: சனியின் உதயத்திற்குப் பிறகு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். ஒரு பெரிய மற்றும் லாபகரமான ஒப்பந்தம் உங்கள் கைகளில் இருந்து நழுவக்கூடும். பண இழப்பு ஏற்படலாம். திருமண வாழ்க்கையும் பாதிக்கப்படலாம். கணவன்-மனைவிக்குள் விரிசல் அதிகரிக்கலாம். சண்டை, சச்சரவு, வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.  

4 /5

மகர ராசி: உறவுகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும். உடல்நலப் பிரச்சினைகள் தொந்தரவு செய்யலாம். தொழில் ரீதியாக நேரம் கடினமாக இருக்கும். நல்ல வேலை-வியாபாரச் சலுகைகள் கையைவிட்டுப் போகலாம். பணியிடத்தில் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கலாம். சக ஊழியர்களுடனான உறவில் விரிசல் ஏற்படலாம்.  

5 /5

மீன ராசி: உங்கள் சிரமங்களை அதிகரிக்கும். பண விரயத்தைத் தவிர்க்கவும். தேவையற்ற விஷயங்களுக்கான செலவுகள் உங்கள் வீட்டின் பட்ஜெட்டைக் கெடுக்கும். தொழில்-வியாபாரத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக வாகனத்தை ஓட்டவும்.