சமீபத்தில், பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தனது புதிய ரூ .365 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தில் நீங்கள் 365 நாட்கள் செல்லுபடியைப் பெறுகிறீர்கள், இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் நீங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், 2 ஜிபி தினசரி தரவு கேப் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறீர்கள். இந்தத் திட்டம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
VI (VODAFONE IDEA) ஒரு ஆண்டு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம் : VI இன் சிறந்த வருட ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்று 2,595 ரூபாயாகும். இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் கால்ஸ் சேவை, தினசரி 100 இலவச SMS, தினசரி 2 ஜிபி டேட்டா என அனைத்தும் மற்ற நிறுவனங்களைப் போன்றே கிடைக்கிறது. அதோடு ஜீ எண்டர்டெயின்மென்ட், வீ மூவிஸ் & டிவி உள்ளிட்ட சேவைகள் கிடைக்கிறது. இது தவிர மற்றொரு வருட திட்டத்தினையும் வழங்குகிறது. இந்த திட்டத்தினை பெற 2,399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இதில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால், இலவச எஸ் எம் எஸ் உள்ளிட்டவை மேற்கண்ட திட்டத்தினை போலவே கிடைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஜீ பிரிமீயம் சேவை மட்டும் இல்லை.
RELIANCE JIO 1 ஆண்டு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம் : ஜியோவின் வருட திட்டத்தினை பொறுத்தவரையில் 2,399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 2ஜிபி டேட்டா, 100 இலவச எஸ் எம் எஸ் உள்ளிட்டவை கிடைக்கும். இந்த 2ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64KBPS ஆக டேட்டா வேகம் குறையும். இந்த திட்டத்தில் ஜியோ ஆப்பிற்கான இலவ்ச சந்தாவினையும் வழங்குகிறது. ஜியோவில் ரூ.2,121 நீண்ட கால ரீசார்ஜ் திட்டம் உள்ளது. இது 1.5 ஜிபி தினசரி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு சலுகைகள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் நன்மை மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கு காம்ப்ளிமென்ட்டரி அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது.
AIRTEL இன் ஓராண்டு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம் : ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்டவற்றை பெற முடியும். எனினும் இந்த திட்டத்தில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 100 இலவச எஸ்எம்எஸ்-களுக்கு பின்பு, அடுத்து ஒவ்வொரு எஸ்எம்எஸ்-ஸூக்கும் 1 ரூபாய் கட்டணமாகும். அதேபோல ஏர்டெல் மற்றொரு திட்டமான 2,698 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 1 வருடத்திற்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் விஐபியை பெறலாம். மேற்கண்ட திட்டத்தில் உள்ள அனைத்து சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
BSNL இன் ஒரு ஆண்டு செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம் : பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.397 விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் ஒரு வருட வேலிடிட்டி உடன் ரூ.365 க்கு கிடைக்கும். ரூ.397 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டா சேவையை 60 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்திற்கான மொத்த வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ரூ.365 திட்டத்துடன் இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் (PRBT) மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டா ஆகியவை கிடைக்கும், அதன் பிறகு வேகம் 80 Kbps ஆக குறையும். இது தவிர, பி.எஸ்.என்.எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டாவை வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 365 நாட்களுக்கு வழங்குகிறது. பிஎஸ்என்எல் டிவி உள்ளடக்கத்துடன் 60 நாட்களுக்கு ஈரோஸ் நௌவிலிருந்து OTT நன்மைகளை மேலும் வழங்குகிறது. இது வரம்பற்ற பாடல் மாற்ற விருப்பத்துடன் இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களையும் வழங்குகிறது.