RBI Ban: தங்கத்தை பிணையாக பெற்றுக் கொண்டு வழங்கும் கடன்களை நிறுத்துமாறு ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு ஆர்பிஐ உத்தரவிட்டது
IIFL Finance Gold Loan Ban : IIFL ஃபைனான்ஸ் லிமிடெட், இனிமேல் தங்கக் கடன்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்றும், அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
IIFL ஃபைனான்ஸ் லிமிடெட் தங்கக் கடன்களை இனிமேல் வழங்கமுடியாது. இது தொடர்பாக இன்று இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது
இந்த அறிவிப்பை அடுத்து வாடிக்கையாளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை கடன் வாங்கிய வாடிக்கையாளர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது
மும்பையில் இருந்து மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய தங்கக் கடன் போர்ட்ஃபோலியோவை தொடர்ந்து நிறுவனம் இயக்கலாம் என்றும் வழக்கமான வசூல் மற்றும் மீட்டெடுப்பு செயல்முறைகள் மூலம் தொடர்ந்து சேவை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தங்கத்தின் தூய்மை மற்றும் நிகர எடையை மதிப்பாய்வு செய்வதிலும், கடன்களை அனுமதிக்கும் போதும், ஏலத்தின் போதும் நகைகளை சரிபார்ப்பதில் தீவிரமான தவறுகள் நடைபெறுவதை ரிசர்வ் வங்கி கண்டறிந்தது
கடன்-மதிப்பு விகிதத்தில் மீறல்கள்; கணிசமான விநியோகம் மற்றும் கடன் தொகையை ரொக்கமாக வசூலித்தல் - சட்ட வரம்புக்கு மேல்; நிலையான ஏல செயல்முறையை கடைபிடிக்காதது என குற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன
வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் பிறருக்கு விதிக்கப்படும் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஆர்பிஐ கூறுகிறது
குற்றச்சாட்டுகள் தொடர்பக கடந்த சில மாதங்களில் நிறுவனத்தால் எந்த திருத்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாடுகளை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வருமாறு அறிவித்துள்ளது
சிறப்பு தணிக்கை முடிந்தவுடன், நிறுவனத்தின் தங்கக்கடன் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்படும்