UPI Autopay : ஆட்டோ பேமெண்ட் வரம்பு அதிகரிப்பு... எவ்வளவுன்னு தெரியுமா? இதோ முழு விவரம்..!

UPI Autopay Limit Hike : இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) மீண்டும் ஒரு நல்ல செய்தியை மக்களுக்கு வழங்கியுள்ளது. இப்போது UPI Autopay மூலம் ரூ.1 லட்சம் வரை ஆட்டோ பேமெண்ட் செய்ய முடியும். 

UPI Autopay Limit Hike News in Tamil : இதுவரை இந்த வரம்பு ரூ.15 ஆயிரமாக மட்டுமே இருந்தது (Auto Payment Limit). மியூசுவல் ஃபண்டுகள்(Mutual Funds), காப்பீட்டு பிரீமியம் (Insurance Premium) மற்றும் கிரெடிட் கார்டு பில்களை செலுத்துதல் உள்ளிட்ட பல சேவைகளில் இந்த வசதி பயன்படுத்தப்படலாம். இப்போது வாடிக்கையாளர்கள் மொபைல் பில், மின்சாரக் கட்டணம், EMI கட்டணம், பொழுதுபோக்கு/OTT சந்தா, காப்பீடு மற்றும் மியூசுவல் ஃபண்டுகள் போன்ற தொடர்ச்சியான கட்டணங்களை எளிதாகச் செலுத்த முடியும்.

 

1 /8

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) செவ்வாயன்று UPI ஆட்டோ பே வரம்பை (UPI Auto Payment) சில வகைகளில் ஒரு பரிவர்த்தனைக்கு 1 லட்சமாக உயர்த்தியது. இப்போது வாடிக்கையாளர்கள் மொபைல் பில், மின்சாரக் கட்டணம், EMI கட்டணம், பொழுதுபோக்கு/OTT சந்தா, காப்பீடு மற்றும் மியூசுவல் ஃபண்டுகள் போன்ற தொடர்ச்சியான கட்டணங்களை எளிதாகச் செலுத்த முடியும். 

2 /8

இதற்கு, ஏதேனும் UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி, தொடர்ச்சியான இ-மேண்டேட்டைத் தொடங்க வேண்டும். இதை ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரை 15,000 ரூபாய்க்கு மேல் ஆட்டோ பேமெண்ட் பரிவர்த்தனைகளுக்கு OTP தேவைப்பட்டது. இப்போது நீங்கள் எந்த OTP இன்றியும் 1 லட்சம் ரூபாய் வரை ஆட்டோ பே செய்ய எளிதாக ஒப்புதல் அளிக்கலாம்.

3 /8

கடந்த வாரமே, பணவியல் கொள்கை மறுஆய்வின் போது, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் UPI மூலம் பணம் செலுத்தும் வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தினார். கடந்த சில ஆண்டுகளில், UPI ஆனது டிஜிட்டல் கட்டணத்தின் விருப்பமான மற்றும் பாதுகாப்பான முறையாக மாறியுள்ளது. 

4 /8

நவம்பர் மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 11.23 பில்லியனை எட்டியுள்ளது. அதன் உதவியுடன், ஒரே செயலியில் இருந்து பல வங்கிக் கணக்குகளை இயக்கலாம். QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் கட்டணங்களை செலுத்தலாம் அல்லது பிறருடைய எண்ணிற்கும் உடனடியாக பணம் அனுப்பலாம்.

5 /8

எந்தவொரு செயலியின் சந்தாவை எடுக்கும்போதும், நாம் பொதுவாக தானாக பணம் செலுத்த (ஆட்டோ பேமெண்ட்) அனுமதிக்கிறோம். இதனால் சரியான நேரத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பணம் தானாகவே கழிக்கப்படும். இந்த ஆட்டோ மேமெண்ட் வசதியை நாம் செயல்படுத்திய பிறகு, தேதியை நினைவில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு பணம் செலுத்துவதற்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும். சரியான நேரத்தில் கட்டணங்களை செலுத்துவதன் மூலம் தாமதக் கட்டணம் அல்லது அபராதங்களைத் தவிர்க்கலாம். 

6 /8

யுபிஐ ஆட்டோ பேமெண்ட் மூலம் தவணை செலுத்துவது மிகவும் எளிதானது. தானாக பணம் செலுத்துவதை எந்த நேரத்திலும் நாம் எளிதாக மாற்றலாம். இதன் மூலம், பணம் செலுத்த காசோலையோ பணமோ தேவையில்லை அல்லது வரிசையில் நின்று நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. அதைத் தொடங்க அல்லது நிறுத்துவதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை.

7 /8

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிசம்பர் 12, 2023 அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது.  

8 /8

அனைத்து ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இணைக்கப்பட்ட கடன் வழங்குவதற்கான ஒரு ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை கட்டமைப்பை வெளியிட இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இது ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களின் கடன்களின் விலை மற்றும் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் என்று வங்கி கூறியது.