ரம்யா பாண்டியனின் கியூட் கல்யாண கிளிக்ஸ்... கங்கை நதி ஓரத்தில் டும் டும் டும்!

Ramya Pandian Marriage Photos: நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மாஸ்டர் லோவல் தவானுக்கும் இன்று ரிஷிகேஷில் திருமணம் நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

ரம்யா பாண்டியன் - லோவல் தவான் திருமணம் கங்கை நதிக்கரையோரத்தில் நடைபெற்ற நிலையில், அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

1 /8

ரம்யா பாண்டியன் (Ramya Pandian) என்றாலே அனைவருக்கும் அந்த மொட்டைமாடி போட்டோஷீட்தான் ஞாபகம் வரும். போட்டோஷூட்டால் பிரபலமடைந்த அவர் நெட்டிசன்களிடம் அதிகம் பரீட்சயமானார்.   

2 /8

தொடர்ந்து, சின்னத்திரை மூலமும், வெள்ளித்திரை மூலமும் மேலும் பிரபலமடைந்தார். சின்னத்திரையில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தார்.   

3 /8

இவரின் முதல் படம் டம்மி பட்டாசு பெரியளவில் வெளியே தெரியவில்லை. ஜோக்கர், ஆண் தேவை, ராமே ஆண்டாலும் ராணவனே ஆண்டாலும் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக, மலையாளத்தில் மம்மூட்டி உடன் மாலை நேரத்து மயக்கத்து திரைப்படத்தில் நடித்திருந்தார். சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.   

4 /8

ரம்யா பாண்டியனும் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். மூத்த நடிகர் அருண் பாண்டியன் இவருக்கு சித்தப்பா ஆவார். ப்ளூ ஸ்டார், அசோக் செல்வனின் மனைவியுமான கீர்த்தி பாண்டியன் இவரின் உறவுக்கார தங்கைதான்.   

5 /8

அந்த வகையில், ஓரிரு படங்களில் ரம்யா பாண்டியன் நடித்து வரும் நிலையில், அவர் யோகா மாஸ்டர் லோவல் தவான் (Lovel Dhawan) என்பவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதனை ரம்யா பாண்டியனும் சில நாள்களுக்கு முன் உறுதிசெய்தார்.   

6 /8

இந்நிலையில், இன்று உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் கங்கை நதிக்கரையோரத்தில் ரம்யா பாண்டியன் - லோவல் தவான் திருமணம் (Ramya Pandian Lovel Dhawan Marriage) நடந்துள்ளது. இத்திருமண நிகழ்வில் குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.   

7 /8

ரம்யா பாண்டியனின் திருமண நிகழ்வு புகைப்படம் (Viral Photos) தற்போது வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்து புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   

8 /8

மேலும் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.