சமீபத்தில், அம்போலி போலீசாரால் ஷெர்லின் சோப்ரா தாக்கல் செய்த எஃப்ஐஆர் தொடர்பாக ராக்கி சாவந்த் கைது செய்யப்பட்டார். இந்த தகவலை ஷெர்லின் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே சில அதிர்ச்சிகரமான காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பிற பிரபலங்களைப் பற்றிய போட்டோ தொகுப்பை இங்கே காணபோம்.
ராக்கி சாவந்த்: திண்டோஷி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை அடுத்து ராக்கி சாவந்த் இன்று கைது செய்யப்பட்டார்.
சல்மான் கான்: 2002 ஆம் ஆண்டு ஹிட் அண்ட் ரன் வழக்கில் சல்மான் கானுக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.
சஞ்சய் தத்: பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது 1993 ஆம் ஆண்டு பாம்பே தொடர் குண்டுவெடிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜான் ஆபிரகாம்: பதான் பட நடிகர் ஜான் ஆபிரகாம் 2006 ஆம் ஆண்டு தனது ஹயபுசாவை சைக்கிளில் மோதியதால் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் இரண்டு பயணிகளை காயப்படுத்தியது மற்றும் 15 நாட்களுக்கு ஜாமீனில் ஜான் ஆபிரகாம் வெளியே வந்தார்.
நவ்ஜோத் சிங் சித்து: நடுரோட்டில் ஏற்பட்ட சாலை தகராறு வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 1988ஆம் ஆண்டு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குர்னாம் சிங்கின் தலையில் அடித்து அவரது மரணத்திற்கு காரணமான சித்து மீது குற்றம் சாட்டப்பட்டது.
ராஜ் குந்த்ரா: ஷில்பா ஷெட்டி குந்த்ராவின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச செயலி வழக்கில் 2 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.