'ஜெயிலர்' படத்தின் ரன்டைம் எவ்வளவு நேரம்? வெளியானது சென்சார் விவரம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேதி நெருங்கி வருவதால், தயாரிப்பாளர்கள் படத்தை தணிக்கை செய்துள்ளனர். 

 

1 /5

ஜெயிலர் சென்சார் முடித்துவிட்டதாகவும், ரஜினியின் இந்த அதிரடி திரைப்படத்திற்கு CBFC 'U/A' சான்றிதழ் வழங்கியதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.  

2 /5

படத்தின் நேரம் 2 மணி 49 நிமிடங்கள் (169 நிமிடங்கள்) என கூறப்படுகிறது. முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்களும், இரண்டாவது பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்களும் இருக்கும். மறுபுறம், இந்த வெள்ளிக்கிழமை ஜெயிலரின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.   

3 /5

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது அசத்தலான உரையுடன் தனது ரசிகர்களை சந்திக்கிறார். இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, யோகி பாபு, உள்ளிட்டபலர் கலந்து கொள்கின்றனர்.   

4 /5

இயக்குனர் நெல்சன் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஆகியோர் இடம் பெரும் இந்த நிகழ்வில் அனிருத் ஜெயிலர் பாடல்களை பாட உள்ளார். இந்த விழாவில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட உள்ளது.   

5 /5

ஜெயிலர் படத்திற்கு ஒளிப்பதிவு விஜய் கார்த்திக் கண்ணனும், படத்தொகுப்பு நிர்மலும், கலை டி.ஆர்.கே.கிரண், சண்டைக்காட்சிகள் ஸ்டன் ஷிவா செய்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னாள் சிறை அதிகாரியாக நடித்துள்ளார்.