Rajinikanth Meets Malaysian President: நடிகர் ரஜினிகாந்த், மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ரஹிமை நேரில் சந்தித்துள்ளார். இதற்கான காரணம் என்ன தெரியுமா..?
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இமச்சல பிரதேசத்திற்கு சென்ற ரஜினிகாந்த் அடுத்து மலேசியாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர், மலேசியாவின் பிரதமரான அன்வர் இப்ரஹிமை சந்தித்தார்.
இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அந்நாட்டு பிரதமர் தனது டிவிட்டர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்ரஹிம் தனது பதிவில், “ஆசியா மற்றும் சர்வதேச உலக அரங்கில் புகழ்பெற்று விளங்கும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தேன். அவர் திரையுலகில் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர், ரஜினிகாந்தை பார்த்தவுடன் ‘சிவாஜி தி பாஸ்’ படத்தில் வரும் ‘பாஸ், மொட்ட பாஸ்’ செய்கையை செய்து காண்பித்தார்.
அதைப்பார்த்து சிரித்த ரஜினி அவரை ஆரத்தழுவி ஹை சொன்னார்.
ரஜினி நடிப்பில் வெளியான கபாலி திரைப்படம் மலேசியாவில் வாழும் தமிழர்களை வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நட்பு ரீதியாக இவர் மலேசிய பிரதமரை சந்தித்திருக்கலாம் என கூறப்படுகிறது.