மொத்தம் ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சின் இஸ்ட்ரஸ் விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை (ஜூலை 27) இந்தியாவுக்கு புறப்படுகிறது. ரஃபேல் ஜெட் விமானங்களை இயக்க இந்திய விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெட் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நிறுத்தப்படும். ஐந்து ரஃபேல் போர் விமானங்களும் புதன்கிழமை (ஜூலை 29) இந்தியாவின் அம்பாலா விமானப்படை நிலையத்தில் ஏறக்குறைய 7,364 கிலோமீட்டர் தூரத்தை கடந்து வந்து தரையிறங்கும்.
ரஃபேல் விமானம் பலவிதமான சக்திவாய்ந்த ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதில் ஐரோப்பிய ஏவுகணை தயாரிப்பாளரான MBDA நிறுவனத்தின் கண்ணுக்கு புலப்படாத தூரம் வரை சென்று தாக்க வல்ல ஏவுகணை, அனைத்து வகை வானிலையில் இயங்கக்கூடிய தொலை தூரம் வரை சென்று எந்த இலக்கையும் தாக்கக் கூடிய MICA ஏவுகணை ஆகியவை அடங்கும்.
ரஃபேலின் இரண்டாவது தொகுப்பு மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா தளத்தில் நிறுத்தப்படும்.
பிரான்சிற்கான இந்திய தூதர் ரஃபேலின் இந்திய விமானிகளுடன் உரையாடுகிறார்
பிரான்சிற்கான இந்திய தூதர் ரஃபேலின் இந்திய விமானிகளுடன் உரையாடுகிறார்
ரஃபேல் ஜெட் விமானங்களின் முதல் தொகுப்பில் Trainer RB-003 அடங்கும், இதில் RB என்பது விமானப்படை தலைவரான ராகேஷ் குமார் சிங் பதவுரியாவை குறிக்கும்.