Post Office Scheme: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பர் திட்டம், ரூ.1000-ல் துவக்கலாம்

Post Office Savings Schemes: சிறிய தொகையை போட்டு பெரிய தொகையை சம்பாதிக்கும் வழிகளை யார்தான் செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்த வழி பாதுகாப்பான வழியாக இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். அந்த வகையில் தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள்  மிகவும் பாதுகாப்பானவை.  

 

அப்படிப்பட்ட ஒரு தபால் நிலைய திட்டம் பற்றி  இந்த பதிவில் காணலாம். இது உங்கள் பணத்தை 124 மாதங்களில் இரட்டிப்பாக்குகிறது. இது தபால் அலுவலகம் கிசான் விகாஸ் பத்ர திட்டமாகும். இந்த திட்டம் சிறந்த வருமானத்தை அளிக்கிறது. குறைந்த தொகையை கூட நீங்கள் அதில் முதலீடு செய்யத் துவங்கலாம்.

1 /5

இந்த திட்டத்தில் ஒற்றை அல்லது கூட்டுக் கணக்கைத் திறக்கலாம். மைனர் சார்பாக கார்டியன் கணக்கைத் திறக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்களும் தங்கள் பெயரில் கணக்கைத் துவக்கலாம். (ஜீ பிசினஸ்)

2 /5

தபால் நிலையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.indiapost.gov.in/ இல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, கிசான் விகாஸ் பத்ரவின் திட்டத்தில், பணம் 124 மாதங்களில் (10 ஆண்டுகள் 4 மாதங்கள்) இரட்டிப்பாகிறது. (Photo: PTI)

3 /5

கிசான் விகாஸ் பத்ரவின் திட்டத்தில் நீங்கள் வெறும் ரூ .1000 உடன் முதலீடு செய்யத் துவங்லாம். 100 இன் பெருக்கங்களில் எந்தத் தொகையையும் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கு வரம்பு இல்லை. (Photo: Reuters)

4 /5

இந்தத் திட்டத்தில் தற்போது 6.9 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. இந்த திட்டம் 10 ஆண்டுகள் 4 மாதங்களில் முதிர்ச்சியடையும். (Photo: Reuters)  

5 /5

இதில் கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், நீதிமன்ற உத்தரவு இருந்தால், மெச்யூரிட்டிக்கு முன்னரே கணக்கை மூடலாம். (Photo: Reuters)