ஐஸ்வர்யா ராய் பச்சன் உலக அழகியாக இருந்த காலம் முதல் தற்போது வரை அதே அழகோடும் அதே ஸ்டைலுடனும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
பொன்னியின் செல்வன்: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இப்படத்தில் பழுவூர் இளவரசி நந்தினியாக நடிக்கிறார், இந்த படத்தில் இவரின் தோற்றத்தை கண்ட ரசிகர்கள் பலரும் வாயடைத்து போய்விட்டனர். நேர்த்தியான உடை, அணிகலன்கள், வசீகர தோற்றம் என அனைவரையும் மயக்குகிறார்.
தேவதாஸ்: சஞ்சய் லீலா பன்சாலியின் ரொமான்ஸ் மியூசிக்கல், பரோவில், ஐஸ்வர்யா ராய் பெங்காலி அழகியாக நடித்து பலரையும் கவர்ந்தார். இப்படத்தில் அவர் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவைகள், அழகழகான நகைகள், கைகளில் மருதாணி என சூடிக்கொண்டு பாரம்பரிய பெங்காலி உடையில் பலரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார்.
ஜோதா அக்பர்: இந்த படத்தில் ஐஸ்வரிய ராயை தவிர வேறு யாரையும் அக்பரின் உண்மையான முகலாய ராணியாக கற்பனை கூட செய்து பார்த்திட முடியாது. மிகச்சிறந்த முகலாய திருமண உடைகள், உலோகத் தங்க எம்பிராய்டரி கொண்ட லெஹெங்காக்கள், ராயல் குந்தன் நகைகள் மற்றும் அவரது குறைந்தபட்ச மேக்கப் என அவர் கொள்ளையழகில் ஜொலித்தார்.
உம்ராவ் ஜான்: இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் பச்சனுடன் நடித்தார். படம் முழுவதும், ஐஸ்வர்யா அனார்கலியுடன் நெட் துப்பட்டாக்கள் மற்றும் அழகான பாசா தங்க நகைகளை அணிந்திருந்தார், அழகாக வடிவமைக்கப்பட்ட நகைகள் மற்றும் அவரது அழகான கண்கள், அவரது வசீகரிக்கும் நடனம் போன்றவை இன்றளவும் பலரது இதயங்களில் நிறைந்துள்ளது.
ஹம் தில் தே சுகே சனம்: 16 வருடங்களுக்குப் பிறகும் இந்தப் படத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயை யாராலும் மறக்க முடியாது. சிவப்பு சிஃப்பான் மற்றும் கருப்பு சால்வையில் அழகாகி காட்சியளித்தார், மேலும் முன் ப்ளீட்களுடன் கூடிய புடவைகள், அழகான தங்க நகைகள் மற்றும் புடவை நிறத்திற்கு ஏற்றாற்போல் மேக்கப் என அவரை தனித்து காட்டியது.