கருவில் சுமந்த தாயை தகனமேடை வரை தூக்கி சுமந்த பிரதமர்... ஒட்டுமொத்த இந்தியாவும் இரங்கல்

Heeraben Modi last rites : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று (டிச. 30) அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 100. 

 

 

 

 

 

 

 

1 /6

கடந்த 2 நாள்களாக குஜராத் அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார். சிகிச்சையில் பலனின்றி இன்று அதிகாலை 3.39 மணிக்கு காலமானார். (IMAGE - ANI / Twitter)

2 /6

தாயார் மறைவை அடுத்து, இன்று காலை குஜராத் வந்த பிரதமர் மோடி, ரேசான் கிராமத்தில் உள்ள தாயாரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த  அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, தனது தாயார் குறித்து பிரதமர் உருக்கமாக ட்வீட் செய்திருந்தார். (IMAGE - ANI / Twitter)

3 /6

வீட்டில் இருந்து உடலை கொண்டு வாகனம் வரை, தனது தாயாரின் உடலை பிரதமர் மோடி தோளில் தூக்கி சென்றார். பின்னர் உடல் ஊர்தியில் வைக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியும் ஊர்தி தாயாரின் உடலுடன் காந்திநகர் சென்றார். (IMAGE - ANI / Twitter)

4 /6

பின்னர், காந்திநகரில் உள்ள செக்டார் 30 என்ற தகனம் செய்யும் இடத்திற்கு ஹீராபென் மோடி உடல் கொண்டுவரப்பட்டது. அப்போதும், ஊர்தியில் இருந்து தகனமேடை வரை தாயாரின் உடலை பிரதமர் மோடி தோளில் சுமந்து சென்றார். (IMAGE - ANI / Twitter)

5 /6

இறுதிச்சடங்கிற்கு பின் பிரதமர் தாயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. (IMAGE - ANI / Twitter)

6 /6

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.  (IMAGE - ANI / Twitter)