நீங்கள் ஒரு தொழிலை செய்யும் வர்த்தகராக இருந்தாலோ, அல்லது புதிய தொழிலைத் தொடங்க திட்டமிட்டாலோ, நீங்கள் ஜிஎஸ்டி எண்ணைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கான செயல்முறை நிறைவடைய பல நாட்கள் ஆகலாம். ஆனால், மூன்று நாட்களுக்குள் இதற்கான அங்கீகாரத்தைப் பெற ஒரு வழி உள்ளது.
ஆகஸ்ட் 21, 2020 முதல், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பதிவு செய்ய விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணை வழங்கும் வணிகங்கள் மூன்று வேலை நாட்களில் ஒப்புதல் பெறும் என்று மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC) அறிவித்தது.
வணிகங்கள் ஆதார் எண்ணை வழங்காவிட்டால், வணிக இடத்தை அதிகாரிகள் நேரடியாகச் சென்று பார்வையிட்ட பிறகுதான் ஜிஎஸ்டி பதிவு வழங்கப்படும் என்றும் அறிவிப்பு தெரிவிக்கிறது. இதற்கு 21 வேலை நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் ஆகலாம். மேலும், COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அதிகாரி, தேவைப்பட்டால், வளாகத்தின் சரிபார்ப்புக்கு முன், பதிவு செய்வதற்குப் பதிலாக கூடுதல் ஆவணங்களைக் கேட்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Gst.gov.in என்ற வலைத்தளத்திற்குச் செல்லவும். Service Option-ஐ கிளிக் செய்யவும். முதலில் முதலில் Registration-ஐ செலக்ட் செய்து பின்னர் new registration-ஐ தேர்ந்தெடுக்கவும். Aadhar authentication-ஐ தேர்வு செய்யவும். ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியில் அங்கீகார இணைப்பு கிடைக்கும். ஆதார் எண்ணை வழங்கி, Validate ஆப்ஷனை கிளிக் செய்யவும். சரிபார்ப்பிற்குப் பிறகு நீங்கள் ஒரு OTP ஐப் பெறுவீர்கள். அதை நீங்கள் அதற்கான பாக்சில் உள்ளிட வேண்டும். அதன் பிறகு, வெற்றிகரமான e-KYC அங்கீகாரத்தின் செய்தி தோன்றும்.
மூன்று நாட்களில் ஆதார் அங்கீகாரம் மூலம் ஜிஎஸ்டி பதிவுக்கான வசதி அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கிடைக்கும்.
இருப்பினும், வரி விலக்குதாரர்கள், வரி வசூலிப்பவர்கள், ஆன்லைன் தகவல் தரவுத்தள அணுகல் மற்றும் மீட்டெடுப்பு சேவைகள் (OIDAR கள்), தனித்துவமான அடையாள எண் (UIN) கொண்ட வரி செலுத்துவோர் மற்றும் குடியுரிமை பெறாத வரி செலுத்துவோர் ஆகியோருக்கு இது தேவையில்லை.