உலகெங்கிலும் 2021 புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெருமளவில் முடக்கப்பட்டன. கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல இடங்களில் வழக்கமான உற்சாக கூட்டங்களைக் காண முடியவில்லை. அரசாங்கங்களும் தலைவர்களும் மக்களை எச்சரிக்கையாக இருக்கவும், கொடிய வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் எச்சரித்தனர்.
உலகம் புத்தாண்டை அதிக நம்பிக்கையுடனும், அரவணைப்புடனும் வரவேற்றபோதும், கொரோனா வைரஸ் பரவுவதை துரிதப்படுத்தும் என்ற அச்சத்தில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் 2021 ஆம் ஆண்டில் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அதிக அளவு கட்டுப்பாடுகளை விதித்திருந்தன.
கொரோனா வைரசின் மையமாக இருந்த வுஹானில் மக்கள் தடையின்றி புத்தாண்டைக் கொண்டாடினர். பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
டிசம்பர் 31, 2020 அன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் இசையை ரசித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிட்னி துறைமுகத்தில் புத்தாண்டின் போது விடப்படும் பட்டாசுகள் எப்போதும் போலவே அழகாக இருந்தன. 2021 ஆம் ஆண்டை ஆஸ்திரேலியா வரவேற்கையில் அங்கு மக்கள் கூட்டம் இல்லாததே வித்தியாசமான ஒன்றாக இருந்தது. . (Image: Reuters)
டோக்கியோவில் முகக்கவசங்களை அணிந்த மக்கள் புனித ஆலயங்களுக்குச் சென்று 2021 புத்தாண்டில் தங்கள் வழக்கமான சடங்குகளைச் செய்தனர். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தனி மனித இடைவெளி பராமரிக்கப்பட்டது. (Image: Reuters)
ஊரடங்கு உத்தரவுகளைத் தொடர்ந்து புதுதில்லியில் வீதிகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தன. இந்த உத்தரவின் படி, டிசம்பர் 31 இரவு 11 மணி முதல் பொது இடங்களில் அனைத்து கொண்டாட்ட நிகழ்வுகளும் கூட்டங்களும் தடை செய்யப்பட்டன. (Image: PTI)
கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் கட்டுப்பாடுகள் இருந்ததால், டி.ஜே. டேவிட் குட்டா பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் இருந்து புத்தாண்டு ஈவ் மெய்நிகர் இசை நிகழ்ச்சியை நடத்தினார். (Image: Reuters)
நியூயார்க்கில் டைம்ஸ் சதுக்கத்தில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டம் உலகம் முழுவதும் பிரபலமானது. கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நியூ யார்க் நகரில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஒரு சில முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். (Image: Reuters)
தைபேயில் 2021 புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு அம்சமாக தைபே 101 வணிக கட்டிடத்திலிருந்து பட்டாசுகள் விடப்பட்டன.