கொரோனா காலத்தில் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கொல்கத்தாவில் உள்ள ஒரு உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜிப் அம்சத்துடன் கூடிய தனித்துவமான முகக்கவசங்களை வழங்குவதற்கான ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
பெரும்பாலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசத்தை அணிய மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு பல இடங்களில் நுழைவு மறுக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில் இந்த உணவகம் இந்த தனித்துவமான செயல்முறையைப் பற்றி சிந்தித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொது இடங்களில் முகக்கவசம் அணிவது ஒரு தினசரி பழக்கமாக வேண்டும் என்பதே அவர்களுடைய குறிக்கோள்.
கொல்கத்தாவில் உள்ள Wok’ies என்ற உணவகம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஜிப் அம்சத்துடன் கூடிய தனித்துவமான முகக்கவசங்களை வழங்குவதற்கான ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
உணவகத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, இந்த மாஸ்கின் அறிமுகத்திற்குப் பிறகு அதிகரித்துள்ளது. உணவுக்குப் பிறகு, இந்த முகக்கவசம், வாடிக்கையாளர்களுக்கே இலவசமாக வழங்கப்படுகிறது.
50 சதவீத அளவில் அனைத்து உணவகங்களையும் செப்டம்பர் மாதம் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், மக்கள் இன்னும் வெளியே வர அஞ்சுவதாகத்தான் தெரிகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான உணவகங்கள் இன்னும் காலியாக உள்ளன.
வோக்கிஸ் உணவகத்தின் எஜமானி, சோமோஷ்ரீ சென்குப்தா, மக்களின் பாதுகாப்பு குறித்தும், கொரோனா மீதான அவர்களின் பயம் குறித்தும் தங்களுக்கும் அக்கறை உள்ளது என்று கூறுகிறார். அதனால்தான், இந்த இரண்டு தேவைகளையும் கருத்தில் கொண்டு, ஒரு ஜிப் கொண்ட முகக்கவசத்தின் யோசனை அவரது மனதில் வந்துள்ளது. அவரது முயற்சியை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். All Photo Source: ANI