Viral News: உடலில் இதயம் இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண்மணி

லண்டனில் வசிக்கும் ஒரு பெண்ணைப் பற்றி உலகம் முழுவதும் பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தன் உடலில் இதயம் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் இங்கிலாந்தின் ஒரே பெண் ஆவார் கிழக்கு லண்டனில் வசிக்கும் செல்வா உசேன். செல்வாவின் இதயம் அவரது முதுகில் உள்ள பையில் உள்ளது. 

அவருடைய இந்த நிலையால் அவரது குடும்பம் எப்போதும் அவரை மிக கவனமாக கண்காணித்துக் கொள்கிறது. ஆனால் மன வலிமை மிகுந்த செல்வா எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். அவரது கதை உலகிற்கு ஒரு முன்மாதிரியாக மாறியது.

1 /6

செல்வா உசேன் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அவர் அப்போது வீட்டில் தனியாக இருந்தார். ஆனால் அவர் தைரியத்தைத் திரட்டி, தானே வண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவரை அடைந்தார்.

2 /6

செல்வா உசேனுக்கு லண்டனில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அது நடக்க முடியவில்லை.

3 /6

செல்வா உசேனுக்கு புதிய உயிர் கொடுக்கும் இந்த அதிநவீன சாதனம் சுமார் 7 கிலோ எடையுள்ளது. இரண்டு பேட்டரிகளைக் கொண்டுள்ளது.

4 /6

செயற்கை இதயத்தின் வேலையை செய்யும் இந்த சாதனம் ஒரு மின்சார மோட்டார் மற்றும் பம்பைக் கொண்டுள்ளது. இது பேட்டரிகளின் உதவியுடன், உடலில் ரத்த ஓட்டத்திற்காக, செருகப்பட்ட ட்யூபின் வாயிலாக காற்றை தள்ளுகிறது.

5 /6

செல்வா உசேனுக்கு ஐந்து வயது மகனும், 18 மாத மகளும் உள்ளனர். செல்வா, 'இந்த அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் நான் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். இதிலிருந்து மீண்டு வர எனக்கு நீண்ட நேரம் ஆனது’ என்று கூறுகிறார். லண்டனைச் சேர்ந்த இந்த பெண்ணின் கதை வைரலானது.

6 /6

இந்த சாதனத்தின் உதவியுடன்தான் செல்வா உயிர் வாழ்கிறார். ஆனால் இதில் ஒரு இக்கட்டான விஷயமும் உள்ளது. இந்த சாதனத்தின் பேட்டரி தீர்ந்த பிறகு அதை மாற்ற 90 வினாடிகள் அவகாசமே உள்ளது.