Reliance Jio-வின் ரூ.999 ரீசார்ஜில் ஏகப்பட்ட நன்மைகள்: 252GB டேட்டா மற்றும் unlimited calls!!

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல நல்ல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர் தேவைக்கேற்ப ஜியோ தனது திட்டங்களையும் ரீசார்ஜ் பேக்கின் அம்சங்களையும் அவ்வப்போது மேம்படுத்தி வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.999 மற்றும் ரூ.555 ரீசார்ஜ் பேக்குகள் வாடிக்கையாளர்களுக்கு லாபகரமான தரவு திட்டங்கள் அதாவது டேட்டா பிளான்களையும், அழைப்பு வசதி, SMS வசதி ஆகியவற்றையும் வழங்குகின்றன. 

1 /5

ரிலையன்ஸ் ஜியோவில் பலவகையான திட்டங்கள் உள்ளன. 84 நாட்கள் செல்லுபடியாகும் பல திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளிக்கின்றது. இவை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன.

2 /5

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ .999 ரீசார்ஜ் பேக்கில் தினமும் 3GB டேட்டா கிடைக்கிறது. ஜியோவின் இந்த ரூ 999 பேக்கில் மேலும் பல சலுகைகளும் கிடைக்கின்றன.

3 /5

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ .999 ரீசார்ஜ் பேக் ஒவ்வொரு நாளும் 3GB டேட்டாவை வழங்குகிறது. பேக்கின் செல்லுபடியாகும் கால அளவு 84 நாட்களாகும். அதாவது வாடிக்கையாளர்கள் மொத்தம் 252GB தரவைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் தரவு தீர்ந்த பிறகு இணையத்தை 64Kbps வேகத்தில் பயன்படுத்தலாம்.

4 /5

வாய்ஸ் காலிங்கிற்கு அதாவது அழைப்புகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற நிமிடங்கள் கிடைக்கும். மேலும் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம். ஜியோ செயலிகளின் சந்தாவும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

5 /5

ஜியோவின் 555 ரூபாய் பேக்கின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்களாகும். இந்த பேக்கில் ஒவ்வொரு நாளும் 1.5GB தரவு கிடைக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்கள் மொத்தம் 126GB அதிவேக தரவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் பெறப்பட்ட தரவு முடிந்ததும் வேகம் 64Kbps ஆக குறைகிறது. வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளின் சந்தா ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.