கூகிள் குரோம் இல்லாத கணினியை கற்பனை செய்து பார்த்துள்ளீர்களா? அப்படி செய்வது கூட பயனற்றது என்று நமக்குத் தோன்றும். உங்கள் கணினியின் கூகிளின் ப்ரௌசர் வேலை செய்வதை நிறுத்தினால் என்ன ஆகும்?
ஆம், 2022 முதல், கூகிள் குரோம் உங்கள் கணினியில் அதன் சேவையை நிறுத்திவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்…
உங்கள் கணினியில் இனி கூகிள் க்ரோம் இயங்காது என யாராவது கூறினால் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஏனெனில், இந்த அம்சம் நம் வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்டது. இதை நாம் நம்மிடமிருந்து வேறுபடித்திப் பார்க்க முடியாது.
தி சன் நிறுவனத்தின் அறிக்கையின்படி, கூகிள் குரோம் விண்டோஸ் 7 க்கான தனது சேவையை ஜனவரி 2022 க்குப் பிறகு முற்றிலுமாக நிறுத்திவிடும்.
பெறப்பட்ட தகவல்களின்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, கூகிள் குரோம் சேவைகள் 2022 ஜனவரி வரை தொடர்கின்றன. ஜூன் 2021 முதல் அதன் சேவைகளை நிறுத்த நிறுவனம் முன்பு முடிவு செய்திருந்தது.
NetMarketShare-ன் அறிக்கையின்படி, உலகளவில் பயன்படுத்தப்படும் கணினிகளில் 20.93 சதவீதம் கணினிகள் இன்னும் விண்டோஸ் 7-ஐப் பயன்படுத்துகின்றன. கூகிளின் இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான பயனர்களை பாதிக்கும்.
விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டமில் மட்டுமே இனி கூகிள் குரோம் இயங்கும் என்று கூகிள் தெளிவுபடுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரௌசரைப் பயன்படுத்த, பயனர்கள் தங்கள் இயக்க முறைமையை மேம்படுத்த வேண்டும்.