BSNL அளிக்கும் Rs 249 first recharge plan: பல வித சலுகைகள், முழு விவரம் இதோ!!

BSNL சமீபத்தில் ஒரு அட்டகாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மிகவும் சிக்கனமான ஒரு திட்டமாகும். தொழில்நுட்ப தளமான கேரலடெலெகாமின் படி, BSNL FRC 249 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் புதிய பயனர்களுக்கானது. இந்த திட்டத்தில், தினமும் 2GB இணைய தரவு (Internet Data) கிடைக்கிறது. 

1 /5

அரசாங்க தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL இந்த திட்டத்தை இந்தியா முழுவதற்குமாக வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் முதலில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். நிறுவனம் இந்த திட்டத்தை நீட்டிக்கவும் முடியும். கடந்த வாரம், BSNL 47 ரூபாய்க்கான FRC-ஐ கொண்டு வந்தது. இதில் 28 நாட்களுக்கான செல்லுபடியுடன் 14GB தரவும் கிடைக்கும்.  

2 /5

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், 28 நாட்களுக்கான செல்லுபடியாகும் தன்மையுடன் தினசரி 2GB தரவு கிடைக்கும். இதில் வரம்பற்ற உள்நாட்டு அழைப்பு கிடைக்கிறது. மேலும் தினமும் 100 எஸ்.எம்.எஸ்.-ம் இலவசமாகக் கிடைக்கும்.

3 /5

இந்த திட்டத்தில் Vi மூலம் 1.5GB தரவு தினமும் வழங்கப்படுகிறது. உள்ளூர் (Local) மற்றும் தேசிய (National) அழைப்புகள் வரம்பற்றவையாக உள்ளன. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-க்கான இலவச சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை 28 நாட்களாகும். இதில் Vi Movies மற்றும் TV-க்கான அணுகலும் கிடைக்கும்.

4 /5

ஏர்டெல்லின் இந்த திட்டத்தில், தினமும் 1.5GB தரவு கிடைக்கிறது. வரம்பற்ற அழைப்புகளுக்கான ஆப்ஷனும் உள்ளது. 28 நாட்களுக்கான செல்லுபடியுடன் 100 எஸ்எம்எஸ்-ம் இலவசமாக கிடைக்கும்.

5 /5

BSNL திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 60 நாட்களுக்கான செல்லுபடி காலம் கிடைக்கும். இருப்பினும், இது ஒரு விளம்பர சலுகையாகும். இது மார்ச் 31 வரை செல்லுபடியாகும்.