மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்: இப்போதைக்கு TA hike கிடையாது

கொரோனா வைரஸ் தொற்றின் துவக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி முடக்கப்பட்டது. அந்த முடக்கம் தற்போது மீட்டெடுக்கப்படும் என வெகு நாட்களாக ஊடகங்களில் செய்தி வந்துகொண்டிருக்கின்றது. 

 

அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்ட பின்னர், ஊழியர்களின் பயணப்படியும் (TA) உயரும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. 

1 /4

அகவிலைப்படி அதிகரிப்பை ஒத்து பயணப்படி அதிகரிக்கப்படாது. ஏனெனில், தற்போது அகவிலைப்படி 25 சதவீதத்திற்கு மேல் இல்லை. மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய 7 ஆவது ஊதியக் குழு மேட்ரிக்ஸ் கணக்கீட்டு விதிப்படி, ஜூலை 2021 முதல் 7 வது ஊதிய கமிஷன் ஊதிய மேட்ரிக்ஸின் படி, ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாகவே இருப்பதால், பயணப்படியில் எந்த அதிகரிப்பும் இருக்காது. 

2 /4

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சிபிசி ஊதியக் கணக்கீட்டு விதியை எடுத்துரைத்து, தேசிய கவுன்சில் ஜே.சி.எம் இன் பணியாளர் தரப்புச் செயலாளர் டி.ஏ.சிவ் கோபால் மிஸ்ரா கூறுகையில், "மத்திய அரசு ஊழியர்களின் TA, ஊழியர்களின் DA-வைப் பொறுத்து அதிகரிக்கும். ஆனால், DA 25 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருந்தால்தான் இது சாத்தியமாகும்.​​ தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களின் DA 17 சதவீதமாக உள்ளது. ஆகையால் சில ஊடக அறிக்கைகள் கூறிவது போல், ஊழியர்களின் TA தற்போது உயராது". என்றார். ஜூலை 2021 இல் DA முடக்கம் நீக்கப்பட்ட பின்னர், DA 25 சதவீதத்துக்கும் மேல் உயரும். ஆகையால் ஜூலை முதல் டிசம்பர் 2021 வரையிலான DA உயர்வு அறிவிப்பு அறிவிக்கப்படும் போது TA உயர்வு எதிர்பார்க்கப்படலாம் என்று மிஸ்ரா மேலும் கூறினார்.

3 /4

தேசிய கவுன்சில் ஜே.சி.எம்மின் தொழிலாளர் தரப்பு செயலாளர் மேலும் கூறுகையில், ​​2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான DA உயர்வு பற்றிய அறிவிப்பு இன்னும் எதிர்பார்ப்பு நிலையிலேயே உள்ளது. எனவே, நவராத்திரியிலிருநு தீபாவளிக்குள், 2021 ஜூலை 1 முதலான DA உயர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறினார். அதாவது, DA உயர்வு, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய அரசு ஊழியர்களின் 7 வது சிபிசி பே மேட்ரிக்ஸில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

4 /4

கோவிட் -19 தொற்றுநோய் பரவல் காரணமாக, மத்திய அரசு, ஜூன் 2021 வரை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை முடக்கியது. இதனால் 1.1.2020 முதல் 30.6.2020, 1.7.2020 முதல் 31.12.2020 வரை மற்றும் 1.1.2021 முதல் 30.6.21 வரையிலான காலப்பகுதியில் அறிவிக்கப்பட்ட மூன்று DA தவணைகளை மீட்டெடுக்க முடியாமல் போனது. அகவிலைப்படி முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, ​​மத்திய அரசு ஊழியர்களின் DA அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 17 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.