Work from Home-க்கு மிகவும் மலிவான Mobile Data Plan-களின் விவரம் இதோ

கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, பலர் work from home அதாவது வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், தினமும் அதிகமான தரவு தேவைப்படுகிறது. பணியின் போது தரவு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, வழக்கமாக செய்யும் அழைப்புகள், கோப்புகளை அனுப்புதல், வீடியோ கான்ஃபெரன்சிங், மின்னஞ்சல் அனுப்புதல் என அனைத்து வேலைகளுக்கும் அதிக தரவு தேவை. 

இது தவிர, வார இறுதி நாட்களிலோ அல்லது கேளிக்கைக்காகவோ படங்களைப் பார்ப்பது மற்றும் பிற வேலைகளுக்கும் தரவு தேவைப்படுகிறது. நமது தினசரி தரவு முடிந்ததும் இணையத்தின் வேகம் மிகவும் குறைந்துவிடுகிறது. இந்த சிக்கலைத் தவிர்க்க, நீங்கள் 3GB தரவுத் திட்டத்தை பயன்படுத்தலாம்.  பி.எஸ்.என்.எல், வோடபோன், ஏர்டெல் மற்றும் ஜியோவின் 3GB டேட்டாவுடன் ப்ரீபெய்ட் திட்டங்கள் பற்றி இன்று காணலாம்.

1 /4

Airtel தினசரி 3GB தரவைக் கொடுக்கும் 2 திட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் முதல் திட்டம் ரூ 558 திட்டமாகும். இந்த திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். மொத்தம் 168 GB தரவு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் இலவச அழைப்பு ஆகியவை இதில் கிடைக்கும். இரண்டாவது திட்டம் ரூ. 398 திட்டமாகும். இதில் உங்களுக்கு 3GB தினசரி தரவு, 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு இலவச அழைப்பு வசதி கிடைக்கும். இரண்டு திட்டங்களிலும் Airtel Xstream பிரீமியத்தின் இலவச சந்தாவும் கிடைக்கும்.

2 /4

Vodafone-ல் தினமும் 3GB தரவை வழங்கும் 2 திட்டங்களும் உள்ளன. முதல் திட்டம் ரூ .558, இரண்டாவது திட்டம் ரூ .398. இரண்டு திட்டங்களிலும், எந்த நெட்வொர்க்கிலும் 3GB தினசரி தரவு, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு ஆகியவை கிடைக்கும். இரண்டு திட்டங்களிலும், Vodafone play மற்றும் Zee 5 ஆகியவற்றின் சந்தாவை நீங்கள் இலவசமாகப் பெறுவீர்கள். 558 ரூபாய் திட்டம் 56 நாட்களுக்கும் 398 ரூபாய் திட்டம் 28 நாட்களுக்கும் செல்லுபடியாகும்.

3 /4

Jio ஒவ்வொரு நாளும் 3GB தரவை வழங்கும் 3 திட்டங்களை கொண்டு வந்துள்ளது. 999 ரூபாய், 401 ரூபாய் மற்றும் 349 ரூபாய்க்கான திட்டங்கள் உள்ளன. ஜியோவின் ரூ 349 திட்டத்தில், தினமும் 28 நாட்களுக்கு 3GB டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் ஜியோ டு ஜியோ இலவச அழைப்பு, பிற நெட்வொர்க்குகளில் அழைக்க 1,000 நிமிடங்கள், தினசரி 100 எஸ்.எம்.எஸ். ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. மேலும் Jio செயலிகளின் சந்தாவும் கிடைக்கிறது.

4 /4

BSNL-ன் ரூ .247 திட்டத்தில், நீங்கள் தினமும் 3GB டேட்டாவைப் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் நீங்கள் 3G நெட்வொர்க்கின் வசதியையும் பெறுவீர்கள். திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை 36 நாட்களாகும். இதில், வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகிய வசதிகளும் கிடைக்கும். இரண்டாவது திட்டமான ரூ .997 திட்டத்தில் தினமும் 3GB தரவு கிடைக்கிறது. மேலும் இதில் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவையும் கிடைக்கின்றன. இத்திட்டம் 180 நாட்கள் அதாவது 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.