Hair Fall பிரச்சனையா? அப்போ இதை எல்லாம் தொடவே தொடாதீங்க

ஆரோக்கியமான, வலுவான மற்றும் பளபளப்பான கூந்தல் இருக்க வெண்டும் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் விருப்பமாகவும் உள்ளது. விலையுயர்ந்த முடி பராமரிப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்தினால் தான் அழகான கூந்தல் கிடைக்கும் என்பதல்ல. உணவுத் தேர்வுகளும் உங்கள் ஆரோக்கியமான கூந்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன். 

பொதுவாக, மன அழுத்தம் மற்றும் மரபணு பிரச்சனைகளும் ஒருவரது கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகின்றன. உணவு வகைகளும் இதில் பெரும் பங்கை வகிக்கின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை. மோசமான, ஆரோக்கியமில்லாத உணவு பழக்கம் முடி உதிர்தலை அதிகரிக்கும். உங்கள் கூந்தல் உதிராமல் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் சில உணவு வகைகள் மற்றும் பானங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமாகும். 

 

1 /4

கூந்தல் பிரதானமாக கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது. கெரட்டின் என்பது உங்கள் தலைமுடிக்கு அமைப்பைக் கொடுக்கும் ஒரு புரதமாகும். கூந்தலின் வளர்ச்சியில் மதுபானத்தின் எதிர்மறையான விளைவால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இது கூந்தலை பலவீனப்படுத்தி வறட்சிக்கு வழிவகுக்கும். கூடுதலாக, மதுபானத்தை அதிகமாக உட்கொள்வது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும், முடி வேர் இழப்புக்கும் வழிவகுக்கும்.

2 /4

உணவுகள் பெரும்பாலும் சேசுரேடட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளால் நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலின் உப்பசத்தை அதிகரிப்பதொடு, இதயம் தொடர்பான நோய்களுக்கு வழி வகுக்கிறது. மேலும், இவற்றால் முடி இழப்பும் ஏற்படுகிறது என்பது பலருக்குத் தெரியாது. கூடுதலாக, எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்களால், உச்சந்தலையில் பிசுபிசுப்புத்தன்மை அதிகமாகி உச்சந்தலையில் இருக்கும் துவாரங்கள் மூடப்பட்டு விடும். 

3 /4

முட்டை பொதுவாக கூந்தலுக்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது. ஆனால் இவற்றை பச்சையாக சாப்பிடக்கூடாது. சமைக்காத முட்டை அல்புமின் பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும். இந்த வைட்டமின் கரோட்டினின் உற்பத்தியில் உதவுகிறது. பச்சை முட்டையின் வெள்ளை பகுதியில் ஏவிடின் உள்ளது. இது பயோடினுடன் சேர்ந்து பலவித உடல் தொடர்பான செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

4 /4

இன்சுலின் எதிர்ப்பு உங்கள் முடி உதிர்தலை ஏற்படுத்துவதோடு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழுக்கை ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இன்சுலின் எதிர்புக்கு பின்னால் முக்கிய காரணம், சர்க்கரை நிறைந்த உணவாகும். சர்க்கரையில் இருக்கும் ஸ்டார்ச் மற்றும் ரிஃபைண்ட் கார்போஹைட்ரேட்ஸ் ஆகியவையும் காரணங்களாக அமைகின்றன.