மாலை வேளையில் செய்யக்கூடாத வேலைகள் என்னென்ன தெரியுமா?

மாறும் உலகம் அனைவரின் வாழ்க்கை முறையையும் மாற்றிவிட்டது. சிலர் மதியத்தில்தான் காலை உணவை சாப்பிடுகிறார்கள். நண்பகலுக்கு பதிலாக இரவில் நேராக சாப்பிடுகிறார்கள். வேத சாஸ்திரங்களில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ பல வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வேதங்களின் படி, மாலை வேளையில் சில செயல்களை செய்வது தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகின்றது. 

மாலையில் சில வேலைகளை செய்தால், நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். நீங்கள் மாலையில் இவற்றை செய்தால், எப்போதும் உங்களுக்கு பண பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல், மாலையில் சில பணிகளைச் செய்வது உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

1 /5

மாலை வேளையில் அன்னை லக்ஷ்மி வீட்டிற்கு வரும் வேளையாகும். ஆகையால், இந்த வேளையில் பூஜைகள் செய்வது, ஸ்தோத்திரங்களை படிப்பது ஆகியவற்றை செய்ய வேண்டும். சிலர் மாலையில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது அன்னை லட்சுமிக்கு கோபத்தை ஏற்படுத்தி வீட்டில் வறுமையை ஏற்படுத்துகிறது. ஆகவே மாலை வேளையில் தூங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2 /5

வழிபாட்டு நேரமான மாலை வேளையில், ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளக்கூடாது. மாலையில், ஏற்படும் உடலுறவால் பிறக்கும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். மேலும், அன்னை லட்சுமியின் அருளும் இதனால் நின்றுவிடுகிறது. எனவே, மறந்தும் கூட மாலையில் உடலுறவு கொள்ள வேண்டாம்.

3 /5

நீங்கள் மாலையில் விளக்குமாறை பயன்படுத்தும் பழக்கத்தையோ அல்லது சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தாலோ, அதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுங்கள். விளக்குமாறு வீட்டின் லட்சுமி என்று கூறப்படுகிறது. மாலையில் அன்னை லட்சுமி வீட்டிற்கு வருகிறார். நீங்கள் மாலையில் விளக்குமாறைப் பயன்படுத்தினால், அது அன்னை லட்சுமியை வீட்டை விட்டு வெளியேற்றுவது போல் இருக்கும். இப்படி செய்தால், வீட்டில் வறுமை நிலவும்.

4 /5

சிலர் கை, கால்கள் மற்றும் வாயைக் கழுவாமல் தூங்கச் செல்கிறார்கள். புராணங்களின் கூற்றுப்படி, இதைச் செய்வதால் வீட்டில் நிதி இழப்பு ஏற்படுகிறது. அன்னை லட்சுமியின் அருள் எப்போதும் உங்கள் வீட்டில் நிலைத்திருக்கவும், எப்போதும் செல்வம் நிலைத்திருக்கவும், உறங்கச்செல்வதற்கு முன்னர் தினமும் உங்கள் கைகளையும் கால்களையும் வாயையும் கழுவி, பின்னர் ஒரு துண்டால் நன்றாக துடைத்துக்கொள்ளவும்.

5 /5

பலரும் மாலையில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருகிறார்கள். மாலை வேளையில் வீட்டிலிருந்து லக்ஷ்மியின் சின்னமான செல்வத்தை வெளியே அனுப்பக் கூடாது. ஒருபோதும், மாலையில் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். இதை கண்டிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளவும்.