Personality Trait Of People Who Walk Fast : ஒரு சிலருக்கு இயற்கையாகவே வேகமாக நடக்கும் பழக்கம் இருக்கும். அவர்களுக்கு எந்த மாதிரியான குணாதிசயம் இருக்கும் தெரியுமா?
Personality Trait Of People Who Walk Fast : நம் கூடவே இருக்கும் ஒருவர், ரோட்டில் நடக்கும் போது மட்டும் ஏதோ ரயிலை பிடிக்க போவதை போல வேகமாக நடப்பதை பார்த்திருப்போம். அவர் ஏன் இவ்வளவு வேகமாக நடக்கிறார், அவர் நடக்கிறாரா இல்லை ஓடுகிறாரா என்ற யோசனை பலருக்கு தோன்றும். உங்களுக்கே கூட இப்படி வேகமாக நடக்கும் பழக்கம் இருக்கும். இது குறித்து உங்களை சுற்றி இருப்பவர்கள் எவ்வளவு கூறியும் உங்களால் இந்த பழக்கத்தை கட்டுப்படுத்தவே முடியாது. இப்படி வேகமாக நடப்பவர்களுக்கு எது போன்ற குணாதிசயம் இருக்கும் என தெரியுமா?
ஒரு சிலருக்கு வேகமாக நடக்கும் பழக்கம் இருக்கும். ஏதாவது இடத்திற்கு செல்ல நேரமாகிவிட்டது என்றால், அப்போது வேகமாக நடப்பதில் தவறே இல்லை. ஆனால், எந்த காரணமும் இல்லாமல் ஒருவர் வேகமாக நடப்பது, அவர்களுக்கு பழக்கமான விஷயங்களுள் ஒன்றாக இருக்கும். அப்படி வேகமாக நடைபோடுபவர்களின் குணாதிசயம் எப்படியிருக்கும் தெரியுமா?
வேகமாக நடப்பவர்கள், தங்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அது தனக்கு கிடைக்கும் வரை நிறுத்தாதவர்களாக இருப்பர். இவர்களுக்கு புதிய அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
வேகமாக நடப்பவர்களுக்கு, நண்பர்களை உருவாக்கி கொள்வது பெரிய விஷயமாகவே இருக்காது. புதிதாக யாரையேனும் பார்த்தால் கூட, அவர்களுடன் சகஜமாக பேசி பழகிவிடுவர்.
ஆபத்தை கண்டு அஞ்சாத நெஞ்சம் கொண்டவர்கள், வேகமாக நடப்பவர்கள். இவர்கள், புதிய விஷயங்களை செய்கையில் அதன் பின்விளைவுகள் தவறானதாக இருக்குமா என்று யோசிக்க மாட்டார்கள்.
வேகமாக நடப்பவர்கள், அதிகாரம் மற்றும் தலைமை பண்பு நிறைந்தவர்களாக இருப்பர். இவர்களின் பேச்சை, பிறரும் கேட்டு அதன்படி நடப்பர்.
இவர்களுக்கு தனியாக இருக்க பயமே இருக்காது. தனக்கு நண்பர்கள் யாரும் இல்லை என்றால் கூட ஜாலியாக சுற்றுபவர்கள் இவர்கள்.
பல பேர் இருக்கும் கூட்டத்தில் இருப்பவர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் இருக்கும் தனித்துவம் இவர்களை தனியாக காண்பிக்கும்.