'நான் உங்கள் மனைவியை காதலிக்கிறேன்...' இந்தியர் போட்ட கமெண்ட் - கம்மின்ஸ் சொன்னது என்ன?

Pat Cummins Instagram Viral: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தில் இந்தியர் ஒருவர் போட்ட கமெண்ட்டும், அதற்கு கம்மின்ஸின் பதிலும் தற்போது வைரலாகி வருகிறது. 

  • Feb 14, 2024, 13:18 PM IST

Pat Cummins Instagram Viral: பாட் கம்மின்ஸ் விளையாட்டில் மட்டுமில்லை வாழ்க்கையிலும் மிகவும் ஸ்போர்டிவ் ஆக இருப்பவர் என பலரும் கூற கேட்டிருப்போம். பாட் கம்மின்ஸின் இந்த பதிவு அதை உறுதிப்படுத்துகிறது.

1 /7

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் காதலர் தினத்திற்கு இணையர்கள் ஜோடியாக புகைப்படம் போடுவது வாடிக்கை. அந்த வகையில், பாட் கம்மின்ஸ் தனது மனைவி பெக்கி பாஸ்டன் உடன் புகைப்படம் ஒன்றை காதலர் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.   

2 /7

அந்த பதிவில் பாட் கம்மின்ஸ்,"சூப்பரான தாய், மனைவி, என் காதலி மற்றும் வெளிப்படையாக ஒரு சர்ஃபரும் (அலைச்சறுக்கு வீராங்கனை) கூட. இனிய காதலர் தின வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருந்தார். பாட் கம்மின்ஸின் இந்த புகைப்படமும் அதிக லைக்குகளை பெற்றனர்.   

3 /7

அந்த புகைப்படத்தில் பலரும் தங்களது வாழ்த்தையும், அன்பையும் பகிர்ந்துகொண்டிருந்த போது, Farhan Khan என்ற பெயரில் உள்ள பயனர்,"நான் ஒரு இந்தியர், எனக்கு உங்கள் மனைவியை காதலிக்கிறேன்" என கமெண்ட் செய்தார்.   

4 /7

அந்த நபரின் எல்லை மீறிய கமெண்டுக்கு பாட் கம்மின்ஸ் நச்சென்று ஒரு பதிலடி கொடுத்தார். பாட் கம்மின்ஸ், "நான் இதை அவளுக்கு அனுப்புகிறேன்" என குறிப்பிட்டார். பாட் கம்மின்ஸின் இந்த கமெண்ட் மிகவும் வைரலாகி வருகிறது.  

5 /7

கம்மின்ஸை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் இந்திய பயனர்கள், எல்லை மீறி ரசிகரை ட்ரோல் செய்து வருகின்றனர், அவர் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் இந்தியர்களின் நற்பெயரைக் குறைக்கிறார்.  

6 /7

பாட் கம்மின்ஸ் கடந்தாண்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், ஐசிசி ஓடிஐ உலகக் கோப்பை தொடர் என முக்கிய கோப்பைகளை வென்று அசத்தினார்.   

7 /7

இந்தாண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இவர் தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது.