International Yoga Day 2021: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3000 பேர் பங்கேற்பு

இன்று, சர்வதேச யோக தினம். திங்கள்கிழமை (ஜூன் 21, 2021) சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டின் கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கான யோகா'. இது உடல் மற்றும் மன நலனுக்காக யோகா பயிற்சி என்பது குறித்து முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

இந்த சர்வதேச யோக தினம், அமெரிக்காவின் மிக பிரபலமான நியூயார்க்  டைம்ஸ் சதுக்கம், நியூஜெர்ஸியில் உள்ள அலிபர்டி ஸ்டேட் பார்க் ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அது மட்டுமால்லாது, டென்மார்க், சூடான், அஜர்பைஜான் உள்ளிட்ட உலகின் பல இடங்களில் சர்வதேச யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1 /6

ஏழாவது சர்வதேச யோகா தினம் நியூயார்க்கின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் கொண்டாடப்படுகிறது. "டைம்ஸ் சதுக்கத்தில் நாள் முழுவதும் நடைபெறும் யோகா விழாவில் 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

2 /6

நாள் முழுவதும் நடைபெறும் யோகா நிகழ்ச்சிகளில், அனுபவமிக்க யோக கலை நிபுணர்கள்,  இலவச யோகா வகுப்புகள் நடத்துகின்றனர். இந்தியாவில் தயாரிக்கப்படும்  உடல் நலத்திற்கான பொருட்களும் வழங்கப்பட்டன.

3 /6

ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) உருவாக்கிய இந்த ஆண்டு உலகளாவிய கருப்பொருளான யோகா ஃபார் வெல்னஸைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேத மற்றும் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட இந்திய பழங்குடியினர் தயாரிப்புகள் (TRIFED) ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தன.

4 /6

டென்மார்க் முழுவதும்  பல இடங்களில், 7 வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. உள்ளூர் யோகா குழுக்களுடன் இணைந்து ஆன்லைனிலும், சமூக ஊடக தளங்களிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

5 /6

ஆர்ட் ஆப் லிவிங் எஸ்டோனியாவுடன் (Art of Living Estonia)இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சி தாலினில் உள்ள சன்னி கட்ரியோர்க் பூங்காவில் நடைபெற்றது

6 /6

21 ஜூன் 2021 அன்று 7 வது சர்வதேச யோகா தினத்தின் ஒரு பகுதியாக, பாகுவில் ( Baku ) உள்ள இந்திய தூதரகம், யோகா ஷாய் ஸ்டுடியோ உடன் இணைந்து, 2021 ஜூன் 20 அன்று யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.