ஐபிஎல் தொடரில் துவம்சம் செய்யும் டாப் 4 சீனியர் வீரர்கள்

வயதானாலும், நடப்பு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடும் டாப் 4 வீரர்களை பார்க்கலாம். 

 

இந்த ஐபிஎல் தொடரில் இளைஞர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில வயதான மற்றும் சீனியர் பிளேயர்கள் விளையாடி வருகின்றனர். 

1 /4

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த சீசனில் 13 போட்டிகளில் 206 ரன்கள் எடுத்துள்ளார். தோனியின் ஸ்டிரைக் ரேட் 128.75. சராசரி 34.33 ஆக உள்ளது. ஒரு போட்டியில் 50 ரன்கள் விளாசி இருக்கும் தோனி, 20 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் அடித்துள்ளார்.

2 /4

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த சீசனில் ஜொலிக்கிறார். இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 285 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 57 வைத்திருக்கும் அவர், ஸ்ட்ரைக் ரேட் 192.57 உள்ளது.

3 /4

குஜராத் டைட்டன்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சாஹா இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் 281 ரன்கள் எடுத்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கும் அவர், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். 

4 /4

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சீசனில் தனது அணிக்காக பேட்டிங் மற்றும் பந்து இரண்டிலும் பங்களித்துள்ளார். இந்த சீசனில் அஸ்வின் இதுவரை 13 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்ஸ்மேனாக ஒரு போட்டியில் அரைசதம் அடித்துள்ளார்.