முட்டையின் ஆரோக்கியம் குறித்து உலவும் சில கட்டுக்கதைகளால் மக்கள் சிலர் குழம்பிய்போய்விடுகின்றனர்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் முட்டையில், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், கொழுப்பு, புரதம், கோலைன், பயோட்டின் - வைட்டமின் பி 7, வைட்டமின் ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிரம்ப இருக்கின்றன.
முட்டையில் ஆரோக்கியமான கொழுப்பு அதிகபட்சம் 200 கிராம் வரை உள்ளது.முட்டையின் மீது இருக்கும் ஓட்டின் கலரை வைத்து வெள்ளை முட்டை மற்றும் பிரவுன் முட்டை என வகைப்படுத்தப்படுகிறது.
இந்த கலர்களால் முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகளின் விகிதங்களில் எந்த வித்தியாசமும் இருக்காது.
கோழியுடன் இணையும் சேவலைப் பொறுத்து முட்டை ஒட்டின் நிறம் இருக்கும். மேலும், கோழியின் வளர்ச்சி, அது எடுத்துக்கொள்ளும் உணவைப் பொறுத்தும் முட்டையில் இருக்கும் ஓமேகா மற்றும் வைட்டமின் டி ஊட்டச்சத்துகளின் விகிதங்களில் மாறுபாடு இருக்கலாமே தவிர, வேறு எந்த வித்தியாசமும் இருக்க வாய்ப்பில்லை.
உடைந்த முட்டைகளை மட்டும் சாப்பிடக்கூடாது என ஹார்வார்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. ஏனென்றால், கோழியின் மீது இருக்கும் சல்மோனெல்லா (Salmonella) பாக்டீரியா முட்டைக்குள் ஊடுருவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறது.