இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேல் நடிக்கும் "நாய் சேகர்" படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்று வருகிறது.
இன்றிலிருந்து என்னுடைய பயணம் நகைச்சுவை பயணமாக இருக்கும். மக்களை சந்தோஷப்படுத்திவிட்டு தான் இந்த உசுரு என்னைவிட்டு போகனும். இதுதான் என்னுடைய லட்சியம் என வடிவேல் (Actor Vadivelu) கூறினார்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை என்று பார்த்தானோ, அன்றிலிருந்து எல்லாமே நல்லபடியாக நடக்கிறது. இனியும் நல்லதாக நடக்கும் என ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். சீக்கிரமா படத்தில் நடிங்க வடிவேலு என்று சொன்னார் தமிழ்நாடு முதல்வர்.
சங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய். 100 கோடி ரூபாய் கூட இழப்பு என சொல்வார்கள். இனி ஷங்கர் ஏரியா பக்கமே போக மாட்டேன். வரலாறு படம் பண்ணும் ஐடியே ஏதும் இல்லை. இனியும் பண்ண மாட்டேன்.
இரண்டு படம் நாயகனாக நடித்துவிட்டு, பின்னர் வேறு கதாநாயகர்கள் படத்தில் நடிக்க இருக்கிறேன். நிறைய வெப்சீரிஸ்க்கு கூப்பிட்டாங்க. இன்னும் கமிட் ஆகல. இப்ப பெரிய திரைக்கு வந்தாச்சு. வெப் சீரிஸ் பின்னாடி பார்ப்போம்.
நண்பன் விவேக்கிற்கு அஞ்சலி. என்னால் மறக்கவே முடியவில்லை. அந்த இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பை கடவுள் எனக்கு தந்திருக்கிறார்.
எனக்கு End-ஏ கிடையாது. நான் கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடி. எப்படியோ தப்பிச்சுட்டேன்.
இப்போதைய தேவை நடிப்பது மட்டும்தான். நாய் சேகர் டைட்டில் தேவைப்பட்டது. நாய்க்கும் வடிவேலுவுக்கும் ஃப்ரெண்ட்ஷிப் பற்றின கதை தான் .