சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தொடர், புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் ஈர்க்கக்கூடிய அம்சங்களால் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போதுள்ள வெளியான அறிக்கைகளின் மூலம், கேலக்ஸி நோட் தொடருக்கு பதிலாக கேலக்ஸி Z ஃபோல்டு தொடரில் நிறுவனம் அதிக கவனம் செலுத்தும் என்று தெரிகிறது. சமீபத்தில், அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி Z ஃபோல்டு 3 குறித்து ஏராளமான அறிக்கைகளை நாம் பார்த்து வருகிறோம், இப்போது அதன் டிஸ்பிளே விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன.
உலகம் முழுவதும் கிறிஸ்தமஸைக் கொண்டாடும் அதே வேளையில், DSCC யின் டிப்ஸ்டர் ரோஸ் யங் 2021 ஆம் ஆண்டில் சாம்சங்கில் இருந்து மடிக்கக்கூடிய சாதனங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
டிப்ஸ்டரைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3 அதன் முந்தைய பதிப்புகளை விட சிறிய டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் ஆனால் சாதனம் ஒப்பீட்டளவில் பெரியதாக இருக்கும். மேலுள்ள டீவீட்டை மேற்கோள் காட்டி ஒரு GSMArena அறிக்கை, சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 3 இன் உள் காட்சி கேலக்ஸி Z ஃபோல்டு 2 இன் 7.59 அங்குல அளவைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் என்று பரிந்துரைத்தது.
உள் காட்சி 7.55 அங்குலமாகவும், கவர் டிஸ்பிளே 6.21 அங்குலமாகவும் சுருங்கக்கூடும் என்று கூறப்பட்டது. மேலும், பிரதான டிஸ்பிளேவின் தெளிவுத்திறன் 2208 x 1768 பிக்சல்கள் மற்றும் அதன் திரை விகிதம் 5: 4 ஆக இருக்கலாம் என்றும் அந்த அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி Z ஃபோல்டு 2 6.23 அங்குல மெயின் டிஸ்பிளேவுடன் வெளியானது என்பதால், அதன் அடுத்த பாதிப்பானது S-பென்னை அதன் சேசிஸில் இடமளிக்க ஒப்பீட்டளவில் சிறிய டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.