கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் கற்றாழை, வேம்பு!

சற்றே ஓய்ந்திருந்த கொரோனா என்னும் அரக்கன், மீண்டும் ஆட்டம் போடத் தொடங்கி விட்டான்.  இந்த நேரத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். 

சற்றே ஓய்ந்திருந்த கொரோனா என்னும் அரக்கன், மீண்டும் ஆட்டம் போடத் தொடங்கி விட்டான்.  இந்த நேரத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். 

1 /5

ஆலூவேரா (Aloe vera) என்படும் கற்றாழை சருமத்தை பாதுகாத்து, ஒரு இரவு நேர எக்ஸ்போலியேட்டராக செயல்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதில் ஏராளமாகக் காணப்படுகின்றன, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.  

2 /5

கற்றாழை அதாவது ஆலூ வேரா (Aloe Vera), ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாகும், இதில் ஏராளமான அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கற்றாழையில் வைட்டமின்கள் மட்டுமல்ல, பீட்டா கரோட்டினும் உள்ளது என தோல் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

3 /5

தோல், முடி சம்பந்தமான நோய் மட்டுமல்லாது பல நோய்களிலிருந்து விடுபடுவதற்கான பழமையான ஆயுர்வேத வைத்தியங்களில் ஒன்றாக வேம்பு, அதாவது வேப்பிலை (Neem) கருதப்படுகிறது. இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

4 /5

இவ்வளவு பயன்கள் நிறைந்த  கற்றாழை மற்றும் வேப்பிலையிலிருந்து ஜூஸ் தயாரிக்க உங்களுக்கு 1 டீஸ்பூன் வேப்ப இலைகள், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 கப் தண்ணீர் மற்றும் தேன் தேவை. வேப்பிலையையும் கற்றாழையையும் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, அதன் பின்  தேன் சேர்த்து உட்கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன்  காலி வயிற்றில் உட்கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும்.   

5 /5

கொரோனா காலத்தில், நீங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி  நன்றாக வைத்திருக்க வேண்டியது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை பெற நீங்கள் கற்றாழை மற்றும் வேப்பிலையிலிருந்து தயாரிக்கப்படும் ஜூஸைக் குடிக்கலாம். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, எடையைக் குறைக்கவும் உதவும். இதன் மூலம்,  உங்கள் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.