"பும்ரா, ஹர்திக் பாண்டியா கதை அன்னைக்கே முடிஞ்சிக்கும்" - காப்பாற்றிய ரோஹித் சர்மா

ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் எப்போதோ அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார்கள் எனவும் ரோஹித் சர்மா அதனை செய்யவில்லை எனவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மூத்த ஓப்பனர் பார்தீவ் படேல் தெரிவித்துள்ளார். 

  • Mar 15, 2024, 01:42 AM IST

 

 

1 /7

ஐபிஎல் தொடர்களில் வெற்றிகரமான அணிகளுள் ஒன்று மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஐந்து முறை கோப்பையை வென்ற அணி மும்பை. அந்த அணிக்கு 2013, 2015, 2017, 2019, 2020 என ஐந்து முறையும் கோப்பையை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா.

2 /7

ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை இந்தாண்டு கேப்டன்ஸியில் இருந்து மும்பை அணி நீக்கியுள்ளது. அவருக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸில் இருந்து இறக்குமதி செய்து கேப்டனாக நியமித்துள்ளது. பாண்டியாவை மும்பை அணி 2021இல் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.   

3 /7

இந்நிலையில், ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் ஓப்பனரும், இந்திய அணியின் மூத்த வீரருமான பார்தீவ்  படேல் பேசத் தொடங்கி உள்ளார்.   

4 /7

பும்ரா குறித்து:"ரோஹித் எப்போதும் வீரர்களின் நம்பிக்கை வைத்திருப்பார். அதற்கு மிகப்பெரிய உதாரணம் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா. பும்ரா 2014ஆம் ஆண்டில் முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்தார். ஆனால் அவர் 2015 சீசனில்தான் அறிமுகமானார், அது அவருக்கு சிறப்பாக அமையவில்லை. அவர் சீசனின் நடுப்பகுதியில் அவர் சிறப்பாக விளையாடாதது போல இருந்தது, ஆனால் இந்த வீரர் பிரகாசிக்கப் போகிறார், அவரை அணியில் நீடித்திருக்கச் செய்ய வேண்டும் என்று ரோஹித் உணர்ந்தார். 2016ஆம் ஆண்டில் இருந்து பும்ராவின் செயல்திறன் அடுத்த கட்டத்தை எட்டியது என்பது அனைவருக்கும் தெரியும்" என்றார் பார்திவ் படேல்.  

5 /7

ஹர்திக் பாண்டியா குறித்து: பார்திவ் படேல் மேலும், "ஹர்திக் பாண்டியாவும் அப்படித்தான். அவர் 2015ஆம் ஆண்டில் துடிப்பாக இருந்தார், ஆனால் 2016ஆம் சீசன் அவருக்கு மோசமானதாக அமைந்தது. குறிப்பாக, நீங்கள் Uncapped (தேசிய அணிக்காக விளையாடாத வீரர்) வீரராக இருக்கும்போது, அணி உங்களை விரைவாக விடுவித்து, ரஞ்சி டிராபி அல்லது பிற உள்நாட்டுப் போட்டிகளில் அந்த வீரர் எப்படிச் செயல்படுகிறார் என்பதை மதிப்பிட விரும்பும். ஆனால் அதற்கு ரோஹித் விடவில்லை. அதனால்தான் இவ்விருவரும் இந்தளவிற்கு வளர்ந்துள்ளனர்" என்றார்.   

6 /7

பட்லர் குறித்து: "சர்வதேச வீரர்களையும் பார்த்தோமானால், நான் ஜோஸ் பட்லரைப் பற்றி குறிப்பிடுவேன். 2017ஆம் சீசனில், ரோஹித் ஷர்மா ஒரு தொடக்க வீரராக இல்லாவிட்டாலும் தன்னால் அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்று கருதினார். அதனால், ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாடிக்கொண்டு, ஜாஸ் பட்லரை என்னுடன் ஓப்பனிங்கில் அனுப்பினார்" என்றார்.   

7 /7

வரும் ஐபிஎல் தொடரில் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையே வெளியாகி உள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் உடன் மார்ச் 24ஆம் தேதி மோதுகிறது. தொடர்ந்து, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான், டெல்லி ஆகிய அணிகளுடன் போட்டி நடைபெறுகிறது.