பிப்ரவரி -11 அன்று வெளியாகவுள்ள படங்கள்!

பிப்ரவரி -11ம் தேதி நான்கு படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிப்ரவரி -11ம் தேதி நான்கு படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

1 /4

FIR :  கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களுள் ஒருவரான மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான FIR படம் 11ம் தேதி வெளியாக உள்ளது.  மேலும் இப்படத்தின் OTT உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் 7 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

2 /4

கடைசி விவசாயி :    'காக்க முட்டை' படத்தை இயக்கிய M.மணிகண்டன் இயக்கத்தில் நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள படம் 'கடைசி விவசாயி'.  விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.  

3 /4

கூர்மன் :    பிரையன் B. ஜார்ஜ் இயக்கத்தில் MK என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் 'கூர்மன்'.  இந்த திரைப்படத்தில் ராஜாஜி, ஜனனி அய்யர், பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்து இருக்கிறார்.  சமீபத்தில் கெளதம் மேனன் குரலில் வெளியான படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வெளியானது.  இந்த படம் பிப்ரவரி -11ம் தேதி வெளியாகவுள்ளது.

4 /4

Moonfall:    அறிவியல் தொழில் நுட்பம் கலந்த இந்த ஹாலிவுட் படத்தை Roland Emmerich இயக்கியுள்ளார்.  இயற்கையின் பேராபத்திலிருந்து பூமியை காக்க போராடும் வீரர்களின் கதைதான் இந்த படம்.  இந்த திரைப்படம் பிப்ரவரி 11ம் தேதி ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.