Chandra Grahanam On Panguni Uthiram 2024 : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் பங்குனி உத்திரம், ஹோலி பண்டிகை அதாவது மார்ச் 25 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாகும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
2024ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் மார்ச் 25ஆம் தேதி அதாவது பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகை நாளில் நிகழ உள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப் போகும் இந்த சந்திர கிரகணமானது மார்ச் 25 ஆம் தேதி, காலை 10.23 மணிக்கு தொடங்கி மாலை 03.02 மணி வரை நீடிக்கும், அதாவது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும். எனவே இந்த சந்திர கிரகணத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் மிகவும் சாதகமான பலனைத் தரும். வேலையில் எதிர்பாராத வெற்றி உண்டாகும். நிதி ஆதாயமும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். நல்ல அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.
ஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் நல்ல பலனைத் தரும். செல்வம் பெருகும். எந்த வேலை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருமானம் அதிகரிக்கும். வங்கி இருப்பும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சிறப்பு பலனைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கலாம். தொழில், வியாபாரம் சிறப்பாக செயல்படும். பணியிடத்தில் நினைத்த பதவி உயர்வு கிடைக்கும். முழு பலனைப் பெறுவீர்கள்.
தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணத்தால் மகிழ்ச்சி உண்டாகும். வெற்றி மழை பொழியும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளை பெறலாம். பொருள் வசதி அதிகரிக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் சுப பலனைத் தரும். நிதி ஆதாயம் உயரும். நல்ல வாய்ப்புகளை பெறலாம். வேலையில் நல்ல பலன்களைப் பெறலாம். மரியாதையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பண வரவு உண்டாகும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.