சிம்மத்தில் எரிப்பு நிலைக்கு புதன் போனால், பாவம் இந்த ராசிகளின் நிலைமை மோசம் தான்...

Mercury Combust September 2024 : புத்திசாலித்தனம், அறிவுசார் செயல்பாடுகள், கல்வி கலை, தகவல் தொடர்பு திறன் என அனைத்திற்கும் காரகரான புதன், எரிப்பு நிலைக்கு செல்லும்போது தனது பலத்தை இழக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அதாவது செப்டம்பர் 14ம் தேதியன்று சிம்ம ராசியில் புதன் எரிப்பு நிலைக்கு செல்கிறார். 

புதன் வலுவிழக்கும்போது, பாதுகாப்பற்ற உணர்வு, கவனமின்மை, மந்தத்தன்மை, மறதி என பல்வேறுவிதமான பாதிப்புகள் ஏற்படும். புதன் எரிப்பு நிலை என்பது பெரும்பாலும் நல்லதாக கருதப்படுவதில்லை.

1 /8

ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களைத் தவிர வேறு எந்த கிரகமும் சூரியனுக்கு அருகில் பத்து டிகிரி வட்டத்துக்குள் வரும்போது எரிப்பு நிலை ஏற்படும். அதாவது, சூரியனை நெருங்கும் கிரகத்தின் சக்திகளை சூரியன் மட்டுப்படுத்திவிடும். அப்போது சூரியனின் சக்தி மட்டுமே எடுபடும், பிற கிரகங்களின் நன்மையை ஜாதகர்கள் பெறமாட்டார்கள்.  

2 /8

பண வரத்து குறைவது, குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவு போன்ற சிக்கல்களை ரிஷப ராசியினர் எதிர்கொள்ளலாம். வேலையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். சம்பளம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறாது. மனதில் கவலையை அதிகரிக்கும், 

3 /8

குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முயன்றாலும், ஏதேனும் காரணத்தால் தடைபடும். செலவு அதிகரிக்கும், விருச்சிகம் ராசிக்காரர்களின் மனதில் சோர்வு ஏற்படும்  

4 /8

செய்யும் பணியில்  அதிருப்தி ஏற்படலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பிறரின் ஆலோசனையை கேட்டு எடுக்கவும். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நடைபெறமால் போகலாம், புதன் எரிப்பு நிலை மீன ராசியினருக்கு செலவுகளை அதிகரிக்கும்

5 /8

சிம்மத்தில் எரிப்பு நிலைக்கு செல்லும் புதனால், சிம்ம ராசியினரின் மனதில் மனக்கிலேசம் உண்டாகும், பழைய நினைவுகள் வந்து மனதை அரித்து கவலைகளை அதிகரிக்கும். நடந்தவற்றை நினைத்து கவலைப்படுவதை தவிர்க்க நினைத்தாலும், பிறர் வந்து அதனை கிளறிவிட்டுக் கொண்டே இருப்பார்கள் என்பதால், யாரிடமும் பேசப்பிடிக்காது. தனிமை வாட்டும் என்பதால் கவலைகள் அதிகரிக்கும்

6 /8

மகர ராசிக்காரர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சுலபமான தீர்வுகள் இருந்தால்கூட அது மனதில் சரியான நேரத்தில் தோன்றாது. தொழில் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும் நேரம் இது

7 /8

மேஷ ராசிக்காரர்களில் புதன் பலவீனமாக இருப்பவர்களுக்கு புதன் எரிப்பு நிலையில் இருக்கும்போது நிலைமை மிகவும் மோசமாக இருக்கும். நினைத்த காரியங்கள் தடைபடும். குல தெய்வ வழிபாடு நலம் தரும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது