7th Pay Commission: ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட், அடிப்படை ஊதியத்தில் விரைவில் ஏற்றம்!!

7th Pay Commission:: மத்திய அரசு சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்தது. இதன் மூலம் ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் அவர்களுக்கு இன்னும் பல பரிசுகள் காத்திருக்கின்றன. இவற்றில் ஒன்றான ஃபிட்மெண்ட்ட் ஃபாக்டர் அதிகரிப்பு குறித்து இந்த பதிவில் காணலாம்.

 

1 /6

ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது இது குறித்த ஒரு புதுப்பிப்பு வந்துள்ளது.

2 /6

அரசு அடுத்த ஆண்டுக்குள் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

3 /6

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்றும் அதை அடுத்த ஆண்டுக்குள் அதிகரிக்கும் முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. இதன் மூலம், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மிகப்பெரிய அளவில் உயரும்.

4 /6

அடுத்த ஆண்டு புதிய ஊதியக் குழுவும் அமைக்கப்படலாம். அந்த நேரத்தில் ஃபிட்மெண்ட் ஃபாக்ட்ர் பற்றிய முடிவும் சாத்தியமாகும். அடுத்த ஊதியக்குழு உருவாகும் முன், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாது என நிபுணர்கள் கூறி வருகிறார்கள். 

5 /6

தற்போது ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம், 7வது ஊதியக் குழுவின்ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆல் பெருக்கி கணக்கிடப்படுகிறது. 7வது ஊதியக்குழு அமலுக்கு வந்த பிறகு, 6வது ஊதியக்குழுவின் ஊதியக்குழுவில் தர ஊதியம் சேர்த்து அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டது. இதில், தற்போதைய நுழைவு நிலை ஊழியரின் ஊதியம் ஃபிட்மென்ட் காரணி 2.57 ஆல் பெருக்கி கணக்கிடப்பட்டது. அதில் இருந்து ஊழியர்களின் பே பேண்டின் படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. 

6 /6

மத்திய அரசு ஊழியர்கள் தற்போதைய முறையில் 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டரைப் பெறுகின்றனர். இதன் அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. இதை 3 ஆக உயர்த்தினால் அடிப்படை சம்பளம் ரூ.21000 ஆகும். மாறாக, 3.68 ஆக உயர்த்தினால், சம்பளம் ரூ.25,760 ஆக உயரும். தங்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்பதே ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.