Shani Asta 2023: திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் பெயர்ச்சியானார். அதன் பின்னர், ஜனவரி 30 ஆம் தேதி இரவு அஸ்தமனமாகியுள்ளார். இனி, மார்ச் 5 ஆம் தேதி அவர் உதயமாவார்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது அஸ்மனமாகும், பின்னர் உதயமாகும். கிரகங்களின் அஸ்தமன மற்றும் உதயமாகும் நிலைகளின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
சனியின் அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 3 ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் ஆதாயமும் முன்னேற்றமும் அடைய வாய்ப்புள்ளது. இந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி பகவானின் அஸ்தமன நிலை மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இவர்களுக்கு இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
சனி பகவான் அஸ்தமனமாவது மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். பண வரவு இருந்துகொண்டே இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.
சனி பகவானின் அஸ்தமனம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். சில விஷயங்களில் இருந்து வந்த அழுத்தங்களிலிருந்து சற்று நிம்மதி கிடைக்கும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி பெறலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.