PS-2: சிம்பு குஷ்பூ ஷோபனா ரேவதி என நட்சத்திரப் பட்டாளம் பொன்னியின் செல்வன் 2-இல்?

Ponniyin Selvan Part 2: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் பாகம் 2 பான் இண்டியா திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

 

இந்த விழாவில் படத்தில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர்கள் மற்றும் கலைஞர்களைத் தவிர, இந்திய திரைவுலகமே கலந்துக் கொண்டது என்று சொன்னால் அது மிகையாகாது. முதல் பாகத்தில் இல்லாத பல பிரபலங்கள், இரண்டாம் பாகத்தில் இருக்கலாம் என்ற ஊகங்களும் வெளியாகியுள்ளது.  

Photo courtesy: @LycaProductions

1 /7

பொன்னியின் செல்வன் - 2 படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பலரும் பல்வேறு புதிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்

2 /7

நல்ல கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு போய்விட்டது. மணிரத்னத்தைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்று சொல்லி பாராட்டினார் கமல்ஹாசன் 

3 /7

படத்தில் நடிக்காவிட்டாலும் குஷ்பு, ஷோபனா, ரேவதி என பல நடிக நடிகைகள் விழாவுக்கு வந்திருந்தனர்

4 /7

நடிகர் சிலம்பரசனும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

5 /7

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது

6 /7

சித்ராவுடன் இணைந்து பாடிய ஏ.ஆர். ரஹ்மான்

7 /7

 "பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், வெறும் அறிமுகம்தான். இரண்டாவது பாகம்தான் முழுமையானது"