Venus Combust, Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் வாழ்க்கையில் சுக்கிரன் கிரகம் மிகவும் முக்கியமான கிரகமாக விவரிக்கப்பட்டுள்ளது. சுக்கிரன் இன்பம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியாகக் கருதப்படுகிறார்.
சுக்கிரன் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சுக்கிரன் சிம்மத்தில் அஸ்தமிக்கும். சுக்கிரன் தற்போது வக்ர நிலையில் சஞ்சரித்து வருகிறார். ஜோதிட கணக்கீடுகளின்படி, எந்த ஒரு கிரகமும் வக்ர இயக்கத்தில் இருக்கும் போது, அதன் அசுப விளைவுகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் இந்த பலவீனமான நிலை உள்ளவர்கள் கெட்ட காலங்களை சந்திக்க நேரிடும். ஆனால் சுக்கிரன் வக்ர நிலையில் அஸ்தமிப்பதால் அதன் அசுப பலன்கள் குறையும். இதனுடன் இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல சுப யோகம் உருவாகி வருகிறது. இவர்கள் செல்வச் செழிப்புடன் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் அடைவார்கள். அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன்: சுக்கிரன் உலக இன்பம், பொருள், காதல், பேச்சாற்றல், ஆகையவற்றின் காரணியாக கருதப்படுகிறார். அவர் அனைத்து வித ஆடம்பரங்களையும் அள்ளித் தருகிறார்.
சுக்கிரன் அஸ்தமனம்: எந்த ஒரு கிரகமும் பிற்போக்கு இயக்கத்தில் நகரும் போது, அதன் அசுப விளைவுகள் அதிகரிக்கும். ஜாதகத்தில் இந்த பலவீனமான நிலை உள்ளவர்கள் கெட்ட காலங்களை சந்திக்க நேரிடும். ஆனால் சுக்கிரன் வக்ர நிலையில் அஸ்தமிப்பதால் அதன் அசுப பலன்கள் குறையும்.
ராசிகளில் அதன் தாக்கம்: சுக்கிரன் அஸ்தமனத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல சுப யோகம் உருவாகி வருகிறது. இவர்கள் செல்வச் செழிப்புடன் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் அடைவார்கள். அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்: சுக்கிரன் அஸ்தமனத்தால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் அசுப பலன்கள் குறைந்து சுப பலன்கள் அதிகரிக்கப் போகிறது. உங்கள் வாழ்க்கையில் அன்பும் ஈர்ப்பும் அதிகரிக்கும். நிதிக் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வரும். இந்த நேரத்தில் உங்கள் குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்,
கடகம்: சுக்கிரன் அஸ்தமனத்தால் பல பிரச்சனைகள் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கும். உங்கள் ஆளுமையில் அதிக பிரகாசம் இருக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பழைய முதலீடுகளால் பயனடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவு இருக்கும்.
சிம்மம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அசுப விளைவுகள் குறைந்து, தொழில் வாழ்க்கை மேம்படும். இந்த காலகட்டத்தில், உங்கள் செலவுகள் அதிகரிப்பதோடு, உங்கள் வருமானமும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். எந்த ஒரு போட்டியில் கலந்து கொண்டாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் சுக்கிரனின் சுப பலன்கள் அதிகரித்து பொருளாதார நிலை மேம்படும். உங்களின் வசதிகளும் அதிகரிக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல துணை கிடைக்கும். முன்பை விட செலவினங்களில் அதிக கட்டுப்பாடு இருக்கும். இந்த நேரத்தில் பணத்தை சேமிப்பீர்கள்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன் வக்ர நிலை வாழ்வில் ஏற்கனவே உள்ள பிரச்சனைகளைக் குறைக்கும் என்று கருதப்படுகிறது. உங்கள் துணையுடனான உறவில் சில பிரச்சனைகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் சற்று எச்சரிக்கையுடன் வேலை செய்ய வேண்டும். பண வரவு அதிகமாகும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.