சுக்கிர தசை ஆரம்பம்: சுக்கிரன் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ஆடம்பர வாழ்க்கை, அமோக வெற்றி

சிம்மத்தில் சுக்கிரன் வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: சுக்கிரன் மிகவும் மங்களகரமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஏனெனில் சுக்கிரன் கிரகம் அபரிமிதமான செல்வம், பணம, கவர்ச்சிகரமான ஆளுமை ஆகியவற்றின் காரணியாக இருக்கிறார். 

 

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் பலமாக இருந்தால், அந்த நபர் தனது வாழ்வில் பணப் பற்றாக்குறையை சந்திப்பதில்லை. அந்த நபர்கள் ராஜவாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் அனைத்து விதமான மகிழ்ச்சியையும் பெறுகிறார்கள். தற்போது சுக்கிரன் சிம்மத்தில் வக்ர நிலையில் உள்ளார். இது மக்களின் பொருளாதார நிலை மற்றும் காதல் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மறுபுறம், சுக்கிரனின் வக்ர நிலை 3 ராசிக்காரர்களின் மகிழ்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் காரணியாக உள்ளது. செப்டம்பர் 4, 2023 வரை சுக்கிரன் வக்ர நிலையிலேயே இருப்பதோடு, இவர்களுக்கு பெரிய நன்மைகளை தருவார். வக்ர சுக்கிரனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

1 /8

சுக்கிரன்: ஜோதிடத்தில், சுக்கிரன் ஒரு மிக நல்ல, மங்கலமான, சுபிட்சம் தரும் கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருந்தால், அந்த நபருக்கு ஒருபோதும் செல்வத்திற்கு குறைவு இருப்பதில்லை. 

2 /8

சுக்கிரன்: சுக்கிரனின் தாக்கம் உள்ளவர்கள் கவர்ச்சியான ஆளுமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். மக்கள் அவர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். சுக்கிரன் கிரகம் அபரிமிதமான செல்வம், பணம், கவர்ச்சிகரமான ஆளுமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். 

3 /8

சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: தற்போது சுக்கிரன் சிம்மத்தில் வக்ர நிலையில் உள்ளார். இது மக்களின் பொருளாதார நிலை மற்றும் காதல் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மறுபுறம், சுக்கிரனின் வக்ர நிலை 3 ராசிக்காரர்களின் மகிழ்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் காரணியாக உள்ளது. செப்டம்பர் 4, 2023 வரை சுக்கிரன் வக்ர நிலையிலேயே இருப்பார்.

4 /8

ராசிகளில் தாக்கம்: சுக்கிரன் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் ஏகப்பட்ட நற்பலன்கள் ஏற்படும். 

5 /8

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் வக்ர நிலை பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு நிலம், சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

6 /8

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்குப் வக்ர நிலை சுக்கிரன் பல நன்மைகளைத் தருவார். இவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். வேலை வெற்றிகரமாக தொடங்கும். தடைபட்ட வேலைகளை முடித்து நிம்மதி உண்டாகும். பொருளாதார விஷயங்கள் நன்றாக நடக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

7 /8

தனுசு: சுக்கிரனின் வக்ர நிலை தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டம் துணை நிற்கும். தடைகள் நீங்கும். வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். குழந்தைகள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் லாபம் இருக்கும். உங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தின் பலத்தால் புகழ் அதிகமாகும். தொழிலில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.