முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய கார் ரசிகர், இவர் பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் வைத்திருக்கும் மிக கவர்ச்சிகரமான கார்களில் ஒன்றுதான் சிவப்பு நிற பிஎம்டபுள்யூ ஐ8 கார். டிசியின் மாற்றத்தால் இந்த கார் தனித்துவமான தோற்றத்தை கொண்டுள்ளது.
இவர் பிஎம்டபுள்யூ ஐ8 ஹைபிரிட் சூப்பர் காரை வைத்திருக்கிறார். இந்த கார் 3 சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
சச்சின் வைத்திருந்த முதல் கார் மாருதி 800, இது அவருக்கு மிகவும் பிடித்த கார். சமீபத்தில் தன்னிடம் இந்த கார் இல்லையென்றும் இதனை மீண்டும் பெற விரும்புவதாகவும் தெரிவித்து இருந்தார்.
பிஎம்டபுள்யூ கார் பல நட்சத்திரங்கள் வைத்துள்ளனர், இவர் பிஎம்டபுள்யூ 5 சீரிஸை வைத்திருக்கிறார். இது இவருக்கு பிடித்தமான கார் என்பதால் இதனை இவர் அதிக முறை ஒட்டியிருக்கிறார்.
சச்சினின் கார்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்தது போர்ஸ்ச் கெய்ன்னே டர்போ கார். இந்த சொகுசு காரின் விலை 1.93 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்படுகிறது.