இந்தியாவின் அதிசயம்... சீனாவை போல் கண்ணாடியால் கட்டப்பட்ட முதல் Skywalk பாலம்..!!

பீகாரில் உள்ள ராஜ்கிர் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடம். ராஜ்கிர் என்ற இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடத்தை ரசிக்க நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள்.  இந்திய வரலாறும் பாரம்பரியமும், பகவான் புத்தரின் பாரம்பரியமும்  இணைத்துள்ள இந்த நகரம் அனைவரையும் ஈர்க்கும் அழகான சுற்றுலா மையமாக திகழ்கிறது

பீகாரில் உள்ள ராஜ்கிர் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடம். ராஜ்கிர் என்ற இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடத்தை ரசிக்க நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள்.  இந்திய வரலாறும் பாரம்பரியமும், பகவான் புத்தரின் பாரம்பரியமும்  இணைத்துள்ள இந்த நகரம் அனைவரையும் ஈர்க்கும் அழகான சுற்றுலா மையமாக திகழ்கிறது

1 /5

பிகாரில், ராஜ்கிர் என்னும் இடத்தில், சீனாவில் அமைக்கப்பட்ட பாலம் போல், ஒரு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் கண்ணாடி பாலம், மக்களை வெகுவாக ஈர்க்கிறது. பீகாரில் அமைக்கப்பட்ட இந்த கண்ணாடி பாலமான ஸ்கைவாக் பிரிட்ஜ்,  நேச்சர் அட்வென்ச்சரை, அதாவது இயற்கை சாகசத்தை  ஊக்குவிக்கும்.

2 /5

பீகார் அரசாங்கத்தால் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள வடகிழக்கு இந்தியாவின் முதல் கண்ணாடி பாலம் இது. ராஜ்கீர் பிராந்தியத்தில், சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இந்த பாலம் கட்டப்பட்டது. சீனாவின் ஹாங்க்சோ மாகாணத்தில் 120 மீட்டர் உயர கண்ணாடி பாலத்தை போன்று,  ராஜ்கிரில் உள்ள கிளாஸ் ஸ்கைவாக் பிரிட்ஜ் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடக்கும்போது, ​​உங்கள் காலடியில் பூமியை தெளிவாக காண முடியும்.

3 /5

ராஜ்கிர் இயற்கை அழகுக்காக பெயர் ஊர். இந்த பாலத்தை சுற்றி சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நேச்சர் சஃபாரி பார்க் அமைக்க பீகார் அரசின் சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. ராஜ்கிரில், ஜூ சஃபாரி, பட்டாம்பூச்சி பூங்கா, ஆயுர்வேத பூங்கா மற்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு வகையான மரங்கள் காணப்படுகின்றன, இவற்றை வேறு எங்கும் காண முடியாது.

4 /5

இந்த முதல் கண்ணாடி பாலம் புத்தாண்டு விழாவில் பொதுமக்களுக்கு திறக்கப்படும். இதனுடன், கோடி ரூபாய் செலவில் ரோப்வேயும் கட்டப்பட்டு வருகிறது, இதன் மூலம்,  உலக அமைதி ஸ்தூபத்திற்கு, மக்களை எளிதில் சென்றடையலாம். ஜூ சஃபாரி நடத்த, மிருகக்காட்சி சாலை மத்திய அதிகார அமைப்பு, நாலந்தா மாவட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

5 /5

சீனாவில் கட்டப்பட்ட முதல் கண்ணாடி ஸ்கைவாக் பாலம் 2016 ஆகஸ்ட், 20 அன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டபோது, ​​அது அந்த நேரத்தில் உலகின் மிக நீளமான மற்றும் மிக உயரமான கண்ணாடி பாலமாகும். இந்த பாலம் 430 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்டது, மேலும் பூமியில்  இருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் உள்ளது.