Chennai Rains : இதுவரை சென்னையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 இடங்கள்!!

Chennai Rains Most Affected Areas : சென்னை நகரம் இதுவரை, பல்வேறு மழை பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. இதனால் எந்தெந்த இடங்கள் முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ளன தெரியுமா?

Chennai Rains Most Affected Areas : வருடத்தின் கடைசி 2 மாதங்களில் வரும் மழை-புயலையும், சென்னை மாநகரையும் பிரிக்கவே முடியாது. அனைத்து வருடமும், சென்னையில் மழை என்றால், கண்டிப்பாக வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. அந்த வகையில், தற்போது ஃபெஞ்சல் புயல் தமிழக மக்களை பயமுறுத்தி வருகிறது. இதனால், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில், மழையால் இதுவரை அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து பார்க்கலாமா? 

1 /7

அடையாறு, கோட்டூர்புரம் அருகிலேயே இருப்பதால் பல நேரங்களில் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று விடும். இதனால், இந்த பகுதியில் வாகனத்தில் செல்வதை தவிர்க்கவும். 

2 /7

பொதுமக்கள் பலர் கூடும் தியாகராய நகர் சாலையில், சிறிதளவு பெய்யும் மழைக்கே தண்ணீர் தேங்குவது வழக்கம். பெரும் மழை பெய்யும் காலங்களில் இங்கு செல்வதை தவிர்க்கவும். 

3 /7

அடையாறு ஆறு அருகே இருக்கும் இல்லங்கள், இதற்கு முன்பு பெய்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் இங்கு வசிப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். 

4 /7

சைதாப்பேட்டையில், பல சாலைகள் தாழ்வாக இருக்கின்றன. இதனால், மழைக்காலங்களில் இங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. 

5 /7

மடிப்பாக்கம் பகுதியில், சில சாலைகளில் வடிகால் வசதிகள் சரியாக இல்லாததால், மழைக்காலங்களில் தண்ணீர் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்று வருகிறது. 

6 /7

சென்னையில், மழையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக இருக்கிறது வேளச்சேரி. இதற்கு அருகே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இருப்பது, தண்ணீர் தேங்குதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

7 /7

தாம்பரம்:  தாம்பரம் பகுதியில் கிழக்கு தாம்பரம், முடிச்சூர், சேலையூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகள், மழைக்காலங்களில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவை மட்டுமன்றி பெருங்குடி, போரூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளும் மழையால் அதிகம் பாதிப்படைகின்றன.