அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார் நிவின்பாலி, ஹேமா கமிட்டியின் அதிரடியால் நிவினுக்கு ஏற்பட்ட நெருக்கடியான சிக்கலிருந்து எப்படி விடுதலையானார் என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
நிவின் பாலி ஒரு பெண்ணால் இவர் சேர்த்து வைத்த அனைத்து நற்பெயரும் சுக்குநூறாக நொருங்கியது என்று பலரும் கூறுகின்றனர். நிவின் பாலி இதில் எப்படி சிக்கினார், மேலும் அவர் எவ்வாறு நிரபராதியானார் என்றுத் தெரிந்தால் ஒரு நிமிடம் அசந்துவிடுவோம், மேலும் படிப்போம்.
மலையாள நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பொய்யான குற்றச்சாட்டை இவர் மீது முன்வைத்திருந்தார், அந்த வகையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பல கோணத்தில் தீவிர விசாரித்து அதன்பின் நிரபராதியாக விடுவிக்கப்பட்டார்.
மலையாள சினிமாவில் அதிகமாக பாலியல் தொல்லைகள் செய்வதாகவும் பலரும் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் ஹேமா கமிட்டியில் மலையாள சினிமாவே அதிர்ந்துவிட்டது.
ஹேமா கமிட்டி என்பது சினிமாவில் பெண்களுக்கு நடக்கும் மனக்கசப்புகளை பகிரலாம், மேலும் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் இந்த கமிட்டி ஆரம்பிக்கப்பட்டது.
ஹேமா கமிட்டி ஆரம்பித்த சில நாட்களிலேயே ஒட்டுமொத்த சினிமாத்துறையும் ஆடிப்போயின. இந்த ஹேமா கமிட்டியினால் பலப் பெண்கள் தங்களுக்குள் நடந்த கசப்பான அனுபவங்களைப் கூறி புகார் அளித்தனர்.
அதில் ஒருப்பெண் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி அந்த பெண்னை நடிகையாக மாற்றுவதாகக் கூறி அவளை துபாயிக்கு அழைத்து சென்றாதாகக் கூறப்படுகிறது.
நிவின் பாலி உண்மையில் அந்தப் பெண்னை அழைத்துசென்றாரா என்றுத் தெரியவில்லை, ஆனால் அவர் தூபாயில் அந்த பெண்ணை வைத்து பல நாட்கள் பாலியல் உறவில் இருந்ததாகவும் பட வாய்ப்பைப் பெற்றுத் தரவில்லை என்றும் கூறினர்.
இந்த வழக்கை நிவின் பாலி மீது அந்த பெண் குற்றன்சாட்டியுள்ளார். இது சினிமா உலகில் பரப்பரப்பாகப் பேசப்பட்டு வந்தது. அந்த வகையில் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நிவின் பாலி நிரபராதி என்று பாலியல் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ததில் அவர், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தில் அந்த இடத்தில் இல்லை என்பது உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் 6வது குற்றவாளியாக இருந்த நிவின் பாலி அனைத்து குற்றங்களிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். கொத்தமங்கலம் டி.ஒய்.எஸ்.பி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தீர்மானம் மிக நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.