அமேசான் CEO ஜெஃப் பெசோஸ் தனது காதலியின் சகோதரரிடமிருந்து ₹12 கோடியை கேட்பது ஏன்.!!!

வக்கீல் கட்டணமான 1,676,919.50 அமெரிக்க டாலர் , மற்ற செலவுகள் 36,019.26 அமெரிக்க டாலரரை இழப்பீடாக அளிக்க வேண்டும் கோரி உலகின் பெரும் பணக்காரர் அமேசான் தலைமை CEO ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்புத் தலைவர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியும், உலகின் பணக்காரருமான ஜெஃப் பெசோஸ், தனது காதலியின் சகோதரர் மைக்கேல் சான்செஸிடமிருந்து சுமார் 12 கோடி ரூபாய் இழப்பீடு கோருகிறார், சான்செஸ் தாக்கல் செய்த அவதூறு வழக்கு காரணமாக அவர் செலவழித்த சட்ட கட்டணங்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளார். பெசோஸ் மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்புத் தலைவரான கவின் டி பெக்கர் ஆகியோர் செலுத்திய வக்கீல் கட்டணமான 1,676,919.50 அமெரிக்க டாலர் மற்ற செலவுகள் 36,019.26 அமெரிக்க டாலரரை இழப்பீடாக அளிக்க வேண்டும் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

1 /6

அவதூறு வழக்கை 2019 பிப்ரவரி மாதம் பெசோஸுக்கு எதிராக சான்செஸ் தாக்கல் செய்தார்.

2 /6

சான்செஸின் வழக்கறிஞர்,, "மிஸ்டர் பெசோஸ் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கோருவது, மிகவும் மட்டமான, ஆபாசமான செயல்  என்று கூறினார்.  

3 /6

தனது வழக்கில், சான்செஸ் அமேசான் நிறுவனர் மற்றும் அவரது கூட்டாளிகள் பெசோஸின் அந்தரங்கமான புகைப்படங்கள் சான்செஸால் கசிய விடப்பட்டதாக ஒரு தவறாக குற்றம் சாட்டுவதாகவும், தான் அவ்வாறு செய்யவில்லை எனவும் கூறியிருந்தார். பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் பரஸ்பரம் டேட்டிங் செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு கட்டுரையை 2019 ஜனவரியில் டாப்லாயிட் வெளியிட்டது.

4 /6

"இந்த கட்டணங்கள் மற்றும் செலவுகள் கோரிக்கை மிகவும் நியாயமானவை. இதனால், இழப்பீடு வழங்க வேண்டும் என கோரும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

5 /6

அந்தரங்க படங்களை கசியவிட்டதாக பெசோஸின் குழு கூறிய போதிலும், போதுமான ஆதாரங்கள் வழங்கப்படாததால், வழக்கை தள்ளுபடி செய்தது

6 /6

ஜெஃப் பெசோஸின் தனிப்பட்ட சொத்துக்களின் நிகர மதிப்பு 193 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும்.